“உனக்கு வெய்ட் பண்ணி, என் பாடி வீக் ஆகுது; பேஸ்மென்ட் ஷேக் ஆகுது..”

“உனக்கு வெய்ட் பண்ணி, என் பாடி வீக் ஆகுது; பேஸ்மென்ட் ஷேக் ஆகுது..”

இவ்வளவு  இளம் வயதிலேயே ஒரு பக்கம் இயக்கம், மறு பக்கம் பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் இயக்குநர் - பாடலாசிரியரான விக்னேஷ் சிவன், தற்போது ‘யாக்கை’ படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார்.

குழந்தை வேலப்பன் இயக்கத்தில், நடிகர் கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘யாக்கை’ படத்தை,  பிரிம் பிச்சர்ஸின்  சார்பில் தயாரித்து இருக்கிறார் முத்துக்குமரன்.

இளைஞர்களின் உள்ளங்களை தமது துள்ளலான இசையால் சூறையாடிச் செல்லும் யுவன்ஷங்கர் ராஜா இந்த யாக்கை படத்திற்கு இசை அமைக்க, விக்னேஷ் சிவன் எழுதியுள்ள அந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியிருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை பெரும் அளவில் உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே ‘யாக்கை’ படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ள 'நீ  எந்நாளும்'   என்னும் பாடல் இளைஞர்களின் செல்போன்களில் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் விக்னேஷ் சிவனின் வரிகளில் தோன்றியுள்ள "உனக்கு வெய்ட் பண்ணி, என் பாடி வீக் ஆகுது... பேஸ்மென்ட் ஷேக் ஆகுது... ஹார்ட்டு பிரேக் ஆகுது"  என்னும் பாடல் இள வட்டாரங்களின் உள்ளத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலின் வலியை, தற்போதைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு விக்னேஷ் சிவன் இந்த பாடலில் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

விக்னேஷ் சிவன் - யுவன்ஷங்கர் ராஜா - தனுஷ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள  இந்த பாடல் விரைவில் அனைவரின் நெஞ்சத்தையும் வருடிச் செல்லும் என்பதில் எந்த  சந்தேகமும் இல்லை.