‘பேய் இருக்க பயமேன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி..!

‘பேய் இருக்க பயமேன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி..!

திலகா ஆர்ட்ஸ் சார்பில் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘பேய் இருக்க பயமேன்’.

படத்தில் கதாநாயகியாக காயத்ரி ரெமா அய்யர் நடித்துள்ளார்.  முக்கிய கதாபாத்திரங்களில் முத்துக் காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஜோஸ் ஃபிராங்க்லின்,  ஒளிப்பதிவு – அபிமன்யு, படத் தொகுப்பு – ஜி.பி. கார்த்திக் ராஜா, ஒலி வடிவமைப்பு – சி.சேது, எழுத்து, இயக்கம் – கார்த்தீஸ்வரன்.

4X4A3366

படம் பற்றி இயக்குநர் கார்த்தீஸ்வரன் பேசும்போது, “இப்படம் பிளாக் காமெடி வகையைச் சார்ந்தது.  பேயை பார்த்து யாரும் பயப்பட கூடாது. அது நம்முடைய  அடுத்த பரிமாணம் என்பதை மையக் கருவாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் இந்த ‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படம்.

இப்படம் குழந்தைகளை பெரிதும் கவரும்விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன.

4X4A4882

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கேரளாவின் மூணாறு மற்றும் மறையூர் காட்டுப் பகுதியில்  படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது…” என்றார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ நடிகர் விஜய் சேதுபதி இன்று காலை வெளியிட்டார்.

 

Our Score