full screen background image

‘கத்தி’ திரைப்படம் பற்றி கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனின் கட்டுரை..!

‘கத்தி’ திரைப்படம் பற்றி கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனின் கட்டுரை..!

அலெக்ஸ் பால் மேனன். இந்தப் பெயரை நினைவிருக்கிறதா..? நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமாதானபுரம் என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி.

கடந்த 2012-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்மா மாவட்ட ஆட்சியராக அலெக்ஸ் பால் பணியாற்றியபோது  மாவோயிஸ்ட் தீவிரவாதிகளில் கடத்தப்பட்டு 12 நாட்கள் கழித்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

இப்போது அதே சத்தீஷ்கர் மாநிலத்தில் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார் அலெக்ஸ் பால். சினிமாக்கள் முதற்கொண்டு அனைத்து விஷயங்களை பற்றியும் இணையத்தளங்களில் குறிப்பாக முகநூல் மற்றும் வலைத்தளங்களில் தனது கருத்துக்களை தீவிரமாகப் பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் குறித்து தனது மாறுபட்ட கண்ணோட்டத்தை தனது வலைத்தளத்தில் எழுதியுள்ளார் அலெக்ஸ் பால்.

நாட்டில் விவசாயத் துறைக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்திற்கு கார்பரேட் நிறுவனங்கள் மட்டுமல்ல.. நாட்டு மக்களாகிய நாமளும் ஒரு காரணம்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

தற்போதைய சினிமாக்கள் பற்றிய தனது பார்வையையும் இதில் அழகாக பதிவு செய்திருக்கிறார்.

அவருடைய கட்டுரை இங்கே :

அட்டக் கத்திக் கலைஞர்கள்! மொண்ணைக் கத்தி மக்கள்!

படித்துப் பாருங்கள்..! இது பற்றிய புதிய பார்வைகள் நமக்குக் கிடைக்கும்..!

Our Score