பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான S.லஷ்மன் குமார், தனது 6-வது படத்தை இன்று துவக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, இவருடன் ரோகிணி, அம்மு அபிராமி, மயில்சாமி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – சிவ நந்தீஸ்வரன், நிர்வாகத் தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – A.பால் பாண்டியன், மக்கள் தொடர்பு – A.ஜான், எழுத்து, இயக்கம் – ராம் சங்கையா.
இப்படம், சம கால மனிதர்கள், வாழ்வதற்கான போராட்ட சூழலில் சுயநலத்திற்காக செய்யும் தவறுகளை முழுக்க, முழுக்க நகைச்சுவை மற்றும் ஆக்க்ஷன் கலந்து சொல்கிறதாம்.
இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் பூஜை, பாடல் பதிவுடன் இன்று இனிதே துவங்கியுள்ளது.