full screen background image

மலையாள சினிமா ரசிகர்களை பதற வைத்த பார்வதி திருவோத்து-நித்யா மேனன்..!

மலையாள சினிமா ரசிகர்களை பதற வைத்த பார்வதி திருவோத்து-நித்யா மேனன்..!

நடிகைகள் நித்யா மேனனும், பார்வதி திருவோத்தும் தங்களது இன்ஸ்டாகிராமில் இன்றைக்கு வெளியிட்ட ஒரு செய்தியினால் மலையாளத் திரையுலகமே ஒரு கணம் ஆடிப் போனது.

பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும் அதன் அருகே குழந்தைக்கு கொடுக்கப்படும் ரப்பர் நிப்பலையும் வைத்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அன்ட் திவொண்டர் பிகின்ஸ்என கேப்ஷன் கொடுத்து அதனை பார்வதியும், நித்யா மேனனும் வெளியிட்டிருந்தனர். இதைப் பார்த்த கேரள ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில் இவர்கள் இருவருக்குமே இதுவரையில் திருமணமாகவில்லை.  அப்படியிருக்க இருவரும் சொல்லி வைத்தாற்போல் கர்ப்பம் என்று குறியீடு செய்தால் என்னவாகும்..

ஒரு மணி நேரம் கழித்தே இது அஞ்சலி மேனன் இயக்கவிருக்கும் வொண்டர் வுமன் என்ற மலையாளப் படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரம் என்ற செய்தி வெளியானது.

இந்தப் படம் கர்ப்பிணிப் பெண்களைப் பற்றிய கதையாம். சமீபத்தில் கோழிக்கோட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரஜிஷா விஜயனும், ஆசீப் அலியும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை பெங்களூர் டேய்ஸ்’, ‘பிரேமம்’ ஆகிய படங்களைத் தயாரித்த அன்வர் ரஷீத் தயாரித்துள்ளதாகத் தெரிகிறது.

Our Score