full screen background image

எழில் இயக்கத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படம்..!

எழில் இயக்கத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படம்..!

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சம் வைக்காத, வெற்றியை சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S.எழில் இயக்கத்தில் இரு தலைமுறைகளை சேர்ந்த மிக முக்கிய நடிகர்களான பார்த்திபனும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து  நடிக்கவுள்ளார்கள்.

தற்போதைய நிலையில் புரடக்‌ஷன் நம்பர்-2’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.விஜய்குமரன் தயாரிக்கிறார்.

பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் D.இமான் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிகிருஷ்ணா படத் தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக N.R.சுகுமாரன் பணியாற்றுகிறார். பிரபல நாவலாசிரியர் ராஜேஷ் குமார் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். C.முருகேஷ் பாபு இப்படத்தின் வசனமெழுதியுள்ளார். இப்படத்தை இயக்குநர் S.எழில் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

படம் குறித்து காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.விஜய்குமரன் பேசும்போது, “படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குழுவே படம் ஒரு மிக அழுத்தமான காமெடி கலக்கலாக, தியேட்டரில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதை அடித்துச் சொல்லும்.

தமிழ் சினிமாவில் தங்கள் தனித்திறமையால் போற்றப்படும் நடிகர்களான பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிப்பது, அனைத்து ரசிகர்களையும் கண்டிப்பாக கவரும். அவர்களின் பலம் படத்தை பெரும் வெற்றி பெறச் செய்யும் என உறுதியாக நம்புகிறேன்.

தமிழின் தலை சிறந்த நாவலாசிரியரான ராஜேஷ்குமாருடைய கதையில்  முதன்முறையாக தனது திரைப் பயணத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் இந்தப் படத்தை இயக்குகிறார் இயக்குநர் S.எழில்.

இயக்குநர் S.எழில் பொழுதுபோக்குடன் கூடிய கமர்ஷியல் சினிமாக்களை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் தருவதில் வல்லவர். விநியோக தளத்தில் பெரிய அளவில் அவர்  கொண்டாப்பட  அதுவே முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

ஒரு தயாரிப்பாளராக  பெரும் மகிழ்ச்சியுடனும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் உள்ளேன்..” என்றார்.

இந்தப் படத்தின் துவக்க விழா கடந்த நவம்பர் 19-ம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பார்த்திபன், கௌதம் கார்த்திக், நாயகி சாய் ப்ரியா தேவா, இயக்குநர் S.எழில், வசனகர்த்தா C.முருகேஷ் பாபு மற்றும் ஒளிப்பதிவாளர் குருதேவ் உட்பட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Our Score