full screen background image

த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது..!

த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது..!

நேற்றுதான் ‘மண்டேலா’ என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் அடுத்த ஓடிடி வெளியிடு என்ற லிஸ்ட்டில் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படமும் இடம் பிடித்துள்ளது.

தற்போது தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் கொரோனாவின் இரண்டாவது பரவலால் திரையுலகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்விற்குப் பிறகு தியேட்டர்களை திறந்தும் ரசிகர்கள் படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை. ஒரு காட்சிக்கு 10 அல்லது 15 பேர் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது.

இதனால் சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் கவனம் ஓ.டி.டி. தளங்கள் பக்கம் திரும்பி உள்ளது.

ஏற்கனவே சூர்யாவின் சூரரைப் போற்று’, ஜெயம் ரவியின் ‘பூமி’, விஜய்சேதுபதி நடித் ‘க.பெ.ரணசிங்கம்’, மாதவனின் ‘சைலன்ஸ்’, ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’, கீர்த்தி சுரேசின் ‘பென்குயின்’ உள்ளிட்ட படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி. தளங்களில் வெளிவந்தன.

இந்த நிலையில் திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு’ படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அது தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டது.

வரும் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் என்ற ஓடிடி தளத்தில் இத்திரைப்படமும் திரைக்கு வரவிருக்கிறதாம்.

இந்தப் படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். இவருடன் நந்தா, ரிச்சர்டு, ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநரான கே.திருஞானம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

Our Score