‘இளம் சூப்பர் ஸ்டார்’ நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் இன்று பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கியது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் நடிகை சிம்ரனும் ஒரு முக்கிய வேடத்தி்ல் நடிக்கவிருக்கிறார். சூரி மற்றும் நெப்போலியன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். படத் தொகுப்பை விவேக் ஹர்ஷன் மேற்கொள்கிறார். கலை இயக்குநர் முத்துராஜின் கலை வண்ணத்தை படத்தில் காணலாம். இயக்குநர் பொன்ராம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படத்திற்கு பின்பு பொன்ராம் இயக்கும் மூன்றாவது படம் இது. இந்த மூன்றிலுமே சிவகார்த்திகேயன்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் 2018, ஏப்ரல் 28-ம் தேதியன்று வெளியாகும் என்று இப்போதே அறிவித்துவிட்டார்கள்..!
இந்தப் படத்தின் துவக்கம் பற்றி தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பேசும்போது, “சிவகார்த்திகேயன் – இயக்குநர் பொன்ராமின் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும், திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற கூட்டணி ஆகும். ஒரு கலகலப்பான பொழுதுபோக்கு படமாக இந்தப் படத்தை மக்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
இன்று துவங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தொடர்ந்து முப்பது நாட்கள் தென்காசி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறவுள்ளது. இக்கதை களத்திற்கு தென்காசி சரியானது என் நாங்கள் எண்ணியதால் இந்த பகுதியை முடிவு செய்தோம்.
இப்படியான பலம் வாய்ந்த அணியை அமைத்ததிலேயே வெற்றியை நோக்கின பயணம் தொடங்கிவிட்டதாகவே கருதுகிறோம். சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை…” என உறுதியாக கூறினார்.