2013, நவம்பர் 3-ம் தேதி ரிலீஸாகி.. வெற்றிகரமாக 100-வது நாளைத் தாண்டியிருக்கிறது ‘பாண்டிய நாடு’ திரைப்படம்.
இந்தப் படம் இப்படி ஜெயிக்குமென்று விஷால் மட்டுமே நினைக்கவில்லை. ஆனால் சுசீந்திரன் நினைத்திருந்தாராம். கதையும், திரைக்கதையும், கூடவே கூரான வசனமும்.. மிகச் சிற்ப்பான இயக்கமும் சேர்ந்து படத்தை இரண்டரை மணி நேரமும் ரசிக்க வைத்தன. இதில் இருந்த சுவையான திரைக்கதைதான் இந்த மாதிரியான மசாலா கலந்த காதல் கதைகளுக்கு அடிப்படை. இயக்குநர்கள் இதனை ஒரு அளவுகோலாகக்கூட எடுத்துக் கொள்ளலாம்..
இமானின் இசையில் ‘ஏலே ஏலே மதுரை’ பாடல் கும்மாளத்தைத் துவக்கி வைத்தது.. ‘ஒத்தக்கடை ஒத்தக்கடை’ பாடல் காதலர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. இது எல்லாவற்றையும் தாண்டி ‘பை பை’ பாடல் தியேட்டர் மொத்தத்தையும் ஆக்கமிரத்தது.. சின்னப் பிள்ளைகளுக்கு ஒரு பாடல் பிடித்துவிட்டது என்றால் படமும் பிடித்துவிட்டது என்பார்கள். அதற்கு இதையும் ஒரு உதாரணமாகச் சொல்லலாம். இந்தப் பாடல் காட்சியில் லஷ்மி மேனன் காட்டிய எக்ஸ்பிரஷன்களெல்லாம் ‘வாவ்’ என்று துள்ளிக் குதிக்க வைத்தன..
லஷ்மி மேனனின் ரசிகர்களும், விஷாலின் ரசிகர்களும் ஒன்று சேர்ந்து படத்தைக் கொண்டாட.. சுசீந்திரன் ரசிகர்கள் கடைசியாக இது எங்களது படம் என்றார்கள். இதுதான் படத்தின் வெற்றிக்குக் காரணம்..!
வெகு நாட்களாகிவிட்டது தமிழ்த் திரையுலகில் ஒரு திரைப்படம் இப்படி வெற்றிகரமாக 100-வது நாளைத் தொடுவது..! பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ‘பாண்டிய நாடு’ டீமுக்கு..!