‘பக்கா’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!

‘பக்கா’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்..!

‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் படம் ‘பக்கா.’

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக  நிக்கி கல்ராணி,  பிந்து மாதவி இருவரும் நடித்துள்ளனர்.

மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துக்காளை, சிசர் மனோகர், சுஜாதா, ‘நாட்டாமை’ ராணி, சாய் தீனா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் ஒரு முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமாரும் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு - எஸ்.சரவணன், இசை - C.சத்யா, பாடல்கள் - யுகபாரதி, கபிலன், கலை –கதிர், நடனம் - கல்யாண்,  தினேஷ், சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், படத் தொகுப்பு – சசிகுமார், தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார், இணை தயாரிப்பு – பி.சரவணன், தயாரிப்பு – டி.சிவக்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.எஸ்.சூர்யா.

இந்தப் படத்திற்கு தற்போது சென்சாரில் ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘பக்கா’ பக்காவான கமர்ஷியல் படமாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர். படம் விரைவில் வெளியாக உள்ளது.