full screen background image

முக்கிய வேடத்தில் ரகுமான் நடிக்கும் ‘பகடி ஆட்டம்’

முக்கிய வேடத்தில் ரகுமான் நடிக்கும் ‘பகடி ஆட்டம்’

மரம் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக T.S.குமார், கே.ராமராஜ், பரணி மூவீஸ் சார்பாக A.குணசேகர், D.சுபா சந்திரபோஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘பகடி ஆட்டம்.’

இந்தப் படத்தில் ரகுமான் சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரியாக நடிக்கிறார். சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘நிமிர்ந்து நில்’ நடித்த கௌரி நந்தா இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற உயரிய கொள்கையுடைய வீர மங்கையாக ஆட்டோ ஓட்டுநராக கௌரி நந்தா நடிக்கிறார்.

மற்றும் நிழல்கள் ரவி, சுதா, சிசர் மனோகர், கருத்தம்மா ராஜஸ்ரீ, சுப்புராஜ், சாட்டை ரவி, மற்றும் சுரேந்தர், மோனிகா, சஹானா, திவ்யஸ்ரீ, கமலி, அஸ்வதி நாயர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி, இசை – கார்த்திக் ராஜா, பாடல்கள் – நா.முத்துக்குமார், கலை – சண்முகம், நடனம் – விமல்ராஜ், எடிட்டிங் – ஸ்ரீனிவாஸ், தயாரிப்பு மேற்பார்வை  – A.V.பழனிச்சாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ராம் கே. சந்திரன், தயாரிப்பு   –  மரம் மூவீஸ் சார்பாக T.S.குமார், கே.ராமராஜ், பரணி மூவீஸ் சார்பாக A.குணசேகர், D.சுபா சந்திரபோஸ்.

படம் பற்றி பேசிய இயக்குநர் ராம் கே.சந்திரன், “நான் இயக்குநர்கள் மகேந்திரன், லேனா மூவேந்தர், செல்வராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி  உள்ளேன். அனைத்து வசதிகளும் உள்ள ஒருவனுக்கும், அன்றாட வாழ்க்கைக்காகப் போராடும் பெண் ஒருத்திக்கும் இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதைக் களம்.

நவீன உலகின் பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி எப்படி ஒருவனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது என்பதுதான் கதையின் முக்கிய அம்சம். படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடைபெற்றிருக்கிறது. மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது..” என்றார். 

Our Score