“என் சினிமா வாழ்க்கையை உயர்த்தியவர் ‘இயக்குநர் சிகரம்’ கே.பி.” – நடிகர் ரகுமான் புகழாரம்

“என் சினிமா வாழ்க்கையை உயர்த்தியவர் ‘இயக்குநர் சிகரம்’ கே.பி.” – நடிகர் ரகுமான் புகழாரம்

இன்று ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 91–வது பிறந்த நாள். இதையொட்டி இன்று காலை முதலே திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

புது புது அர்த்தங்கள்’ படத்தின் நாயகனான நடிகர் ரகுமானும் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தருக்கு தனது நினைவஞ்சலியை இன்றைக்குத் தெரிவித்திருக்கிறார்.

அதில்,என் வாழ்கையில் மறக்க முடியாத, நான் என்றும் வணங்கும் குருநாதருக்கு நிகரானவர் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர் அவர்கள்.

ஒவ்வொரு நடிகனும், நடிகையும் அவரது படத்தில் முகம் காட்ட ஆசையுடன் காத்திருந்த காலத்தில்தான் எனக்கு ஒரு வரமாக அவரது ‘புது புது அர்த்தங்கள்’ என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஏற்கனவே நான் சில தமிழ் சினிமாக்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் எனக்கு தென்னிந்திய சினிமாவில் ஒரு தனி அடையாளத்தை கொடுத்து, என் சினிமா வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்பதில் நன்றியுடன் பெருமைப்படுகிறேன்.

கே,பி. சாரின் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதே பாக்யம் என்றிருக்க எனக்கு மீண்டும் அவரது பாடங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பெரிய அதிஷ்டம்தான்..!

அவருடைய எல்லா படங்களுமே காலத்தை வென்று நிற்பவை. இன்றும் தினமும் ரசிகர்களிடமிருந்து புது புது அர்த்தங்ள்’ படத்துக்கு பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது.

கே.பி. சார் இப்போது நம்முடன் இல்லை என்றாலும் அவர் என்னை போன்ற கலைஞர்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் என்றென்றும் வாழ்கிறார்…” என்று சொல்லியிருக்கிறார் ரகுமான்.

Our Score