தனுஷ் இயக்கத்தில் உருவான ‘ப.பாண்டி’ திரைப்படம் ஏப்ரல் 14-ல் ரிலீஸாகிறது 

தனுஷ் இயக்கத்தில் உருவான ‘ப.பாண்டி’ திரைப்படம் ஏப்ரல் 14-ல் ரிலீஸாகிறது 

நடிகர் தனுஷ் இயக்குநராக களமிறங்கும் 'ப.பாண்டி' (பழனிச்சாமி பாண்டி) படத்தில் ராஜ்கிரண்  ஹீரோவாக நடிக்க ஜோடியாக  ரேவதி நடித்துள்ளார்.

இவர்களுடன்  பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டியனும், நட்புக்காக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பாலாஜி மோகன், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு - தனுஷ், ஒளிப்பதிவு - ரா.வேல்ராஜ், இசை - ஷான் ரோல்டான், பாடல்கள் - தனுஷ், செல்வராகவன் மற்றும் ராஜூ முருகன், நிர்வாக தயாரிப்பு - எஸ். வினோத் குமார், படத்தொகுப்பு - ஜி.கே. பிரசன்னா, நடனம் - பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி - சில்வா, ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி. சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மது. 

படத்தின் முன்னோட்டங்கள் மற்றும் படத்தின் இசை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. 

மேலும் நடிகர் ராஜ்கிரணை, தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா முதன்முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படம் 1991-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி வெளியானது.

இன்று அவர் மகன் தனுஷ், ராஜ்கிரணை ஹீரோவாக மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ‘ப.பாண்டி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி சித்திரை திருநாள் அன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.