full screen background image

ரஜினி – ரசிகர்கள் சந்திப்பு திடீர் ரத்து..!

ரஜினி – ரசிகர்கள் சந்திப்பு திடீர் ரத்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏப்ரல் 12 முதல் 16-ம் தேதிவரை தன்னுடைய ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் தன் ரசிகர்களை சந்திக்க இருந்த நிகழ்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வாட்ஸ் அப்பில் குரல் பதிவில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில், “என்னை வாழ வைத்த தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கு நான், ரஜினிகாந்த் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அணைவருக்கும் ஒரு தகவல்.. 

பத்து ஆண்டுகள் ஆயிற்று நான் உங்களை சந்தித்து..  உரையாடி,  புகைப்படம் எடுத்து.  ரசிகர்களாகிய நீங்களும் என்னை சந்திப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தீர்கள். நேரமின்மையின் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.

தற்போது அதற்கான சந்தர்ப்பமும், வாய்ப்பும் கிடைத்த நிலையில் ரசிகர்களாகிய உங்களை நான் சந்திப்பதற்கு ஏப்ரல் 12 முதல் 16-ம் தேதிவரை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், உங்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. 

ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 300 ரசிகர்கள் என்ற வீதம் தோராயமாக  2000 ரசிகப் பெருமக்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க,  என்னுடைய ஆசை மற்றும் விருப்பத்தின் பெயரில் திட்டமிடப்பட்டிருந்தது. 

ஆனால், அத்தனை ரசிகர்களுடனும் தனித்தனியாக புகைப்படம் எடுப்பது என்பது ஒரு நாளில் நடைமுறையில் கடினமான விஷயம் என்பதால், 8 பேர் கொண்ட குழுவாக புகைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக இருந்ததால், ரசிகர்கள் அணைவரும் தனித்தனியாக என்னுடன் புகைப்படம் எடுக்க கோரிக்கை வைத்தீர்கள். ரசிகர்களாகிய உங்களின் விருப்பத்தை ஏற்று,  தற்போது நடைபெற இருந்த (ஏப்ரல்12- 16 தேதி) சந்திப்பை ஒத்தி வைத்துள்ளோம். 

இனி வரும் காலத்தில், ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்க தக்க முன்னேற்பாடு செய்யப்படும். இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கிறோம்.

என் ரசிகர்களாகிய நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

வணக்கம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

Our Score