full screen background image

40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படம்!

40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படம்!

சிறந்த இயக்குநர் விருது பெற்ற ”மண்” படத்தின் இயக்குநரான  புதியவன் ராசையாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஒற்றைப் பனை மரம்’.

இந்தப் படத்தை RSSS பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.தணிகைவேல் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், மாணிக்கம் ஜெகன், தனுவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஈழத்தில் போர் முடிவுற்ற இறுதி நாட்களில் நடக்கும் கதையைச் சொல்கிறது. சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனை மரம்’ உருவாகியுள்ளது.

இப்படத்தில் வரும் காட்சிகள், யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, ஈழத்தில், கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடுகின்றன. 

இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திருப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைந்துள்ளது. அதனாலேயே சிறந்த இசையமைப்பாளர்  விருதையும்  பெற்றிருக்கிறார்.

தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத் தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளை இத்திரைப்படம் பெற்றுள்ளது. 

இப்படம் தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகிறது.

Our Score