full screen background image

‘ஒரு பக்கக் கதை’ – 6 வருட கால தாமதத்திற்குப் பின்பு ஓடிடியில் வெளியாகிறது..!

‘ஒரு பக்கக் கதை’ – 6 வருட கால தாமதத்திற்குப் பின்பு ஓடிடியில் வெளியாகிறது..!

2012-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’.

நடிகர் விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை மிக வேகமாக உயர்த்திய திரைப்படம். இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருந்தார். மிகப் பெரிய ஹிட்டையும் கொடுத்து, வசூலையும் புரட்டியெடு்த்தது இத்திரைப்படம்.

இந்தப் பாராட்டுக்களோடும், சாதனைகளோடும் ஒப்பிட்டால் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இந்த இடைப்பட்ட 8 வருடங்களில் சுமாராக 6 படங்களையாவது இயக்கி வெளியிட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவரது துரதிருஷ்டமோ என்னவோ.. அவரது அடுத்த படமே இப்போதுதான் வெளியாகவிருக்கிறது. அதுவும் தியேட்டரில் அல்ல.. ஓடிடி தளத்தில்.

ஜீ-5 என்னும் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 25-ம் தேதியன்று கிறிஸ்துமஸ் வெளியீடாக இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

வாசன் விஸுவல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராமும், மேகா ஆகாஷும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு-சி.பிரேம்குமார், இசை – கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பு – ஆண்டனி, எழுத்து, இயக்கம் – பாலாஜி தரணிதரன்.

இத்திரைப்படத்திற்கு 2014-ம் வருடம் செப்டம்பர் 30-ம் தேதியன்று பூஜை போடப்பட்டு 2014 டிசம்பர் மாதம் படப்பிடிப்பும் துவங்கியது.

ஆனால் பல்வேறு காரணங்களினால், பொருளாதாரச் சிக்கல்களினால் மாட்டிக் கொண்டு தத்தளித்த இத்திரைப்படம் 6 வருடங்கள் கழித்து இப்போதுதான் வெளியாகவிருக்கிறது.

Our Score