full screen background image

“கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என்றால்தான் பிளைட் டிக்கெட்” – ‘அண்ணாத்த’ பட நடிகர்களின் அனுபவம்..!

“கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என்றால்தான் பிளைட் டிக்கெட்” – ‘அண்ணாத்த’ பட நடிகர்களின் அனுபவம்..!

ஹைதராபாத் அருகில் இருக்கும் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம்தான் ரஜினியின் கடைசி திரைப்படமாக அமையும் வாய்ப்புள்ளது என்பதால் இத்திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் வெளியிடவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எண்ணியுள்ளது.

அதேபோல் தயாரிப்பில் குறையொன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு பேச வைத்திருக்கும் சன் பிக்சர்ஸ், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விஷயத்திலும் மிகுந்த கவனத்தைச் செலுத்தி வருகிறது.

இத்திரைப்படத்தில் இயக்குநர்கள் மனோஜ்குமார், சி.ரங்கநாதன், கவிஞர் பிறைசூடன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர்களுக்கு ஷூட்டிங் வருவதற்கு முன்பாகவே கொரோனா டெஸ்ட் எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறது.

இது பற்றி நம்மிடம் பேசிய நடிகர்கள், “இந்தத் தேதியில் ஷூட்டிங் இருக்கிறது என்று எங்களிடம் சொன்னபோதே கொரோனா டெஸ்ட் எடுத்துக் காட்டுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதன்படி காட்டினோம். அதற்குப் பிறகுதான் எங்களுக்கு பிளைட் டிக்கெட்டே போட்டுக் கொடுத்தார்கள்…” என்றார்கள்.

இந்த அளவுக்கு நடிகர், நடிகைகள் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Our Score