full screen background image

விரைவில் வருகிறது ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா’ படம்..!

விரைவில் வருகிறது ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா’ படம்..!

‘விருகம்’ திரைப்படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஜி.சிவா நாயகனாக நடித்து இயக்கி விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டுடா ‘.

இந்தப் படம் ஒரே நபர் நடிப்பில் வெளியாகும் திரில்லர் படம்.

படத்தின் நாயகனை போலீசார் ஒரு கொலை வழக்கில் கைது செய்து விசாரிக்க அந்தக் கொலைகளை அவன் செய்யவில்லை என மறுக்கிறான்.

அந்தக் கொலைகளின் பின்னால் இருக்கும் மர்ம நபர் யார், ஏன், எதற்காக என்பது மீதி கதை.

அருண் சுஷில் மற்றும் சிவக்குமார் ஓகி ரெட்டி ஒளிப்பதிவு செய்து, அரவிந்த் J.P. படத் தொகுப்பு செய்து, ஜி.சிவா இயக்கியிருக்கும் இப்படம் நவம்பர் வெளியிடாக திரைக்கு வரவிருக்கிறது.

Our Score