நாவலை திரைப்படமாக்குகிறார் தயாரிப்பாளர்-இயக்குநர் சுரேஷ் காமாட்சி

நாவலை திரைப்படமாக்குகிறார் தயாரிப்பாளர்-இயக்குநர் சுரேஷ் காமாட்சி

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இதில் ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் வெற்றி பெற்றார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு’ என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி.

அரசியல் கதைக் கள பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப் பொட்டில் அறைந்தது போல ‘மிக மிக அவசரம்’ படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத்திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதி வருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை.

இவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது.

இந்நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்தில் பங்கு கொள்ளப் போகும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Our Score