full screen background image

சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ படம்

சன்னி லியோன் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ படம்

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS நிறுவனங்களின் சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ஓ மை கோஸ்ட்’.

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எழுத்து, இயக்கம் – ஆர்.யுவன்.

வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த ஹாரர் கலந்த காமெடி  திரைப்படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகையான சன்னி லியோன், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை சன்னி லியோன் இந்த ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடிப்பதாக அறிவித்ததில் இருந்தே இந்தப் படம் பேசப்பட்டு வருகிறது. அதிலும் சன்னி லியோன் இந்தப் படத்தில் இரண்டு முக்கிய வேடங்களில் நடிக்கவிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர், புதுமையான இந்த ஃபர்ஸ்ட் லுக் திரைப்பட ரசிகர்களிடத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் எழுத்தாளரும், இயக்குருமான R.யுவன் இது பற்றிக் கூறும்போது, “ஓ மை கோஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடுவதில் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தியா முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து அன்பான வரவேற்பை காணும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சன்னி லியோனின் அர்ப்பணிப்புக்கு நன்றி. இந்தப் படத்திற்காக, அவர் தனது பாத்திரத்தை  சிறப்பாக செய்ய வேண்டுமென பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டார். இந்தப் படம் அவர் நடித்த படங்களிலேயே புதியது மற்றும் முற்றிலும் தனித்துவமானது என்று அவர் தீவிரமாக நம்பினார்.

இந்த OMG’ என்பது ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை கலந்த படம். இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் ஹாரர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் திரையரங்குகளில்  பார்வையாளர்களுக்கு ஒரு  சிறப்பான பொழுது போக்கு அனுபவமாக இருக்கும்.

இதில்  சன்னி லியோன் பாத்திரத்திற்கு ஒரு வரலாற்று பின்னணி  இருப்பதால், அவரது தோற்றம் முற்றிலும் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது, இது  படத்திற்கு ஒரு சிறப்பு ஈர்ப்பாக இருக்கும்…” என்றார்.

படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவிலான திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Our Score