full screen background image

‘B.E. BAR’ படத்தின் பர்ஸ்ட் லுக்கினை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்..!

‘B.E. BAR’ படத்தின் பர்ஸ்ட் லுக்கினை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்..!

Absolute Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் A.மால்கம் தயாரித்துள்ள படம் பி.ஈ. பார்’.

இந்தப் படத்தில் சுரேஷ் ரவி மற்றும் இஷாரா நாயர் படத்தில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, கல்லூரி வினோத், மற்றும் பல பிரபலமான நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – விஷ்ணு ்ரீ K.S., படத் தொகுப்பு- வடிவேல் விமல்ராஜ், இசை – ஆதித்யா & சூர்யா, கலை இயக்கம் – சிவராஜ், நடன இயக்கம் – அஷார், வசனம் – கல்லூரி வினோத், பாடல் வரிகள் – ஞானகரவேல் மற்றும் கானா பிரபா, எழுத்து, இயக்கம் – ஆர்.டி.எம்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற திரைப்படத்தின் மூலம், சிறந்த நடிப்பு மற்றும் பட உருவாக்கத்திற்காக விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம்  பாராட்டுகளையும் பெற்ற குழுதான் இப்படத்தை உருவாக்கிறது என்பது மற்றுமொரு சிறப்பாகும்.

இந்த ‘பி.ஈ பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், ரசிகர்களிடமிருந்து  மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது  ‘பி.ஈ பார்’ படக் குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பி.ஈ பார்’ படக் குழுவை சந்தோஷத்தில் ஆழ்த்திய முக்கிய காரணங்களில் ஒன்று படத்தின் முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது ஆகும்.

இந்த ‘பி.ஈ பார்’ திரைப்படம், தங்களது அரியர் பேப்பர்களை பாஸ் செய்ய கஷ்டப்படும் இரு மாணவர்களை பற்றியது.  பிரண்ட்ஷிப் மற்றும் காமெடியின் கலவையாக ‘FRI-COM’ என்ற வகையில் உருவாக்கப்படும்  முதல் திரைப்படம் இதுவாகும்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. படத்தின் டீசரை விரைவில் படக் குழு வெளியிடவுள்ளது,

இந்தப் படத்தினை வரும் ஜூன் மாதம் வெளியிட படக் குழு முடிவு செய்துள்ளது.

Our Score