நார்வே நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழாவில் 2013-ம் ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. சிறந்த படமாக ‘பரதேசி’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2. சிறந்த நடிகருக்கான விருது ‘பரதேசி’ படத்தில் சிறப்பாக நடித்தற்காக அதர்வாவுக்கு வழங்கப்படுகிறது.
3. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது ‘பரதேசி’ படத்திற்காக செழியனுக்கு வழங்கப்படுகிறது.
4. சிறந்த இயக்குநருக்கான விருது ‘பரதேசி’ படத்தை இயக்கிய பாலாவுக்கு வழங்கப்படுகிறது.
5. சிறந்த நடிகைக்கான விருது ‘விடியும் முன்’ படத்தில் நடித்த பூஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
6. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ‘கடல்’, ‘மரியான்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
7. சிறந்த பாடகிக்கான விருது ‘மரியான்’ படத்தில் ‘எங்க போன ராசா’ பாடலை பாடிய சக்தி ஸ்ரீகோபாலனுக்கு வழங்கப்படுகிறது..
8. சிறந்த பாடகருக்கான விருது ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு ‘தங்கமீன்கள்’ படத்தின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்காக வழங்கப்படுகிறது.
9. சிறந்த நகைச்சுவை நடிகராக சூரி ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்திற்காக பெறுகிறார்.
10. சிறந்த பாடலாசிரியர் விருது நா.முத்துக்குமாருக்கு ‘தங்கமீன்கள்’ படத்திற்காக கிடைத்திருக்கிறது.
11. ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஆச்சி மனோரமாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
12. ‘இயக்குநர் பாலுமகேந்திரா நினைவு விருது’ ‘ஹரிதாஸ்’ படத்திற்குக் கிடைத்துள்ளது.
13. ‘கே.எஸ்.பாலசந்திரன் நினைவு விருது’ ‘ராஜாராணி’ படத்திற்குக் கிடைத்துள்ளது.
விருது பெறும் கலைஞர்களுக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!
விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 27-ம் தேதி நார்வே தலைநகரமான ஆஸ்லோவில் நடைபெறவுள்ளது.