full screen background image

நார்வே தமிழ்த் திரைப்பட விழா – ‘காவியத்தலைவன்’ விருதுகளை அள்ளியது..!

நார்வே தமிழ்த் திரைப்பட விழா – ‘காவியத்தலைவன்’ விருதுகளை அள்ளியது..!

வருடந்தோறும் நார்வேயில் நடைபெறும் நார்வே தமிழ்த் திரைப்பட விழாவின் 2014-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

விருது பெறுபவர்களின் பட்டியல் இது :

சிறந்த படம் – குக்கூ

சிறந்த இயக்குநர் – வசந்தபாலன் (காவியத்தலைவன்)

சிறந்த நடிகர் – சித்தார்த் (காவியத்தலைவன்)

சிறந்த நடிகை – வேதிகா (காவியத்தலைவன்)

சிறந்த இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன் (குக்கூ-ஜிகர்தண்டா)

சிறந்த தயாரிப்பு – ராமானுஜன்

சிறந்த பாடலாசிரியர் – யுகபாரதி (குக்கூ)

சிறந்த குணசித்திர நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த துணை நடிகர் – நாசர் (காவியத்தலைவன்)

சிறந்த துணை நடிகை – குயிலி (காவியத்தலைவன்)

சிறந்த ஒளிப்பதிவாளர் – வெற்றிவேல் மகேந்திரன் (கயல்)

சிறந்த பாடகர் – ஹரிச்சந்திரன் (காவியத்தலைவன்)

சிறந்த பாடகி – வைக்கம் விஜயலட்சுமி (என்னமோ ஏதோ)

சிறந்த படத்தொகுப்பாளர் – விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)

சிறந்த சமூக விழிப்புணர்வு படம் – சிகரம் தொடு

வாழ்நாள் சாதனையாளர் விருது – இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

கலைச்சிகரம் விருது – நடிகர் சிவக்குமார்

சிறந்த நடிப்பிற்கான நடுவர்களின் விருது – நடிகர் வின்சென்ட் (கயல்)

இயக்குநர் பாலுமகேந்திரா விருது – இயக்குநர் பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்)

நடிகர் கே.எஸ்.பாலசந்திரன் விருது – நடிகர் விவேக் (நான்தான் பாலா)

மேற்கண்ட இந்த விருதுகளில் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த பாடகர் ஆகிய 6 பிரிவுகளில் ‘காவியத்தலைவன்’ திரைப்படம் விருதுகள் பெறுவது குறிப்பிடத்தக்கது.

சிறந்த குறும் படம் – ஆவணப்பட விருதுகள்

சிறந்த குறும் படம் –மெளனவிழித் துளிகள் – இயக்குநர் ராம் இளங்கோ

சிறந்த இயக்குநர் – வ.கவுதமன் (புத்தாண்டு பரிசு)

சிறந்த நடிகை – செளந்தர்ய ஷெட்டி ( தெய்வா)

சிறந்த ஒளிப்பதிவாளர் – வம்சி கிருஷ்ணா (சானை யுத்தம்)

சிறந்த ஆவணப் படம் – கண்ணாடி பொம்மைகள் – ஜி.வெங்கடேஷ்குமார்

சிறந்த தமிழ் இசை வீடியோ – என் உயிரை – டி.சதீஷ்காந்த்

சிறந்த உலக அளவிலான குறும் படம் – Transit – Director William Rubeck Lindhardt. 

இந்த விருதுகள் நார்வே தலைநகரமான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி முதல் 26-ம் தேதிவரையில் நடைபெறவிருக்கும் தமிழ்த் திரைப்பட விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Our Score