full screen background image

‘நூடுல்ஸ்’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டார்

‘நூடுல்ஸ்’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டார்

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான  மாரி செல்வராஜ் ‘நூடுல்ஸ்’- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு படத்தினை வாழ்த்தியுள்ளார்.

ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் பிரக்னா அருண் பிரகாஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அவருடன் சுருளி ராஜா டிஎம் மற்றும் வசந்தமாரிமுத்து இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மதன் தக்‌ஷிணாமூர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும்  நடித்துள்ளார். ரெளடி பேபி’ புகழ் S.J. ஆழியா, அருவி படப் புகழ் திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

T.வினோத் ராஜா MFI உடன் இணைந்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிவி பிரகாஷூடன் ராபர்ட் சற்குணம் இணைந்து பின்னணி இசை அமைத்துள்ளார். ரமேஷ் கிருஷ்ணன் MK படத்தின் பாடல்களை கம்போஸ் செய்துள்ளார்.

படத் தொகுப்பு – சரத்குமார், பாடல் வரிகள் – தனிக்கொடி & ராஷ்மி, கலை இயக்கம் – ஆனந்தன் எட்வர்ட் கென்னடி, ஒலி வடிவமைப்பாளர் –  JM ஃப்ரான்சிஸ், DI கலரிஸ்ட் – கிருபா ப்ரின்ஸ், வடிவமைப்பு – பாரதி, VFX: பாலு.

V ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் அனைத்து வகையான வெளியீட்டு உரிமைகள் உட்பட உலகளாவிய வெளியீட்டை பெற்றுள்ளது.

Our Score