ஃபிலிம்பேர் விருது – ‘காவியத்தலைவன்’, ‘கத்தி’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மெட்ராஸ்’ படங்களிடையே கடும் மோதல்..!

ஃபிலிம்பேர் விருது – ‘காவியத்தலைவன்’, ‘கத்தி’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மெட்ராஸ்’ படங்களிடையே கடும் மோதல்..!

2014-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான பிலிம்பேர் பத்திரிகையின் விருதுகளுக்கான போட்டியில் ‘காவியத்தலைவன்’, ‘மெட்ராஸ்’, ‘கத்தி’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய 4 படங்களே அதிகமான பிரிவுகளில் பிரதானமாக மோதுகின்றன.

kaaviya-thalaivan-1

‘காவியத்தலைவன்’ திரைப்படம் மிக அதிகமாக சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், பாடகி என அனைத்துப் பிரிவுகளிலுமே போட்டியிடுகிறது.

Madras-Movie-Posters

‘மெட்ராஸ்’ திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இசையமைப்பாளர், பாடகர், பாடகி ஆகிய 9 பிரிவுகளில் போட்டியிடுகிறது.

kaththi-movie-poster-1

‘கத்தி’ திரைப்படம், சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, பாடகர், பாடகி, பாடலாசிரியர் ஆகிய 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Velaiy-illa-pattathari

‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம், சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இசையமைப்பாளர் ஆகிய 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

aniruth-1

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ‘மான் கராத்தே’, ‘கத்தி’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய 3 படங்களுக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

தேர்வாகியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நமது வாழ்த்துகள்..!

Our Score