full screen background image

நடிகர் சங்கத்திற்கு ஜூலை 15-ல் தேர்தல்

நடிகர் சங்கத்திற்கு ஜூலை 15-ல் தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் ஜூலை 15-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த ஜூன்-1-ம் தேதியன்று  சங்கத்தின் தலைவர்  சரத்குமார் தலைமையில் தியாகராய நகரில் நடந்தது.  பொதுச் செயலாளர்  ராதாரவி, துணை  தலைவர்கள் விஜயகுமார்,  கே.என். காளை,  பொருளாளர் வாகை சந்திரசேகர், செயற்குழு   உறுப்பினர்கள் சார்லி, ரவிகுமார்,  சின்னி ஜெயந்த், சந்தானபாரதி, சகுந்தலா, கே.ஆர். செல்வராஜ், வீரமணி, ராஜேந்திரன், ’பசி சத்யா, குயிலி, ஜெயமணி, கண்டு கல்யாணம்,  சவுண்டப்பன், ராஜ்குமார், இசையரசன்,  சித்தன், பிரசாத் வி.சி. ராஜேந்திரன், துணை குழு   உறுப்பினர்கள் கே.ராஜன்,  எஸ்.எஸ்.ஆர். கண்ணன், ராஜ  இந்திரபிரவீன், நாமக்கல் ராஜேந்திரன், முகமது மஸ்தான் ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் 2015-2018-க்கான தென் இந்திய  நடிகர் சங்க  தேர்தல் வடபழனி என்.எஸ்.கிருஷ்ணன் சாலையில் உள்ள திரைப்பட  இசையமைப்பாளர்     சங்க  அலுவலகத்தில் 15.7.2015 அன்று நடத்துவது என்றும்  தேர்தல் அதிகாரிகளாக  வழக்கறிஞர் ஜெ. செல்வராசன், துணை தேர்தல் அதிகாரியாக வழக்கறிஞர் ஜேம்ஸ் அமுதன் ஆகியோரை நியமிப்பது என்றும் ஏகமனதாக தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளதாம்.

மேலும், சங்கத்தின் சட்ட விதிப்படி தேர்தல் சம்பந்தமான அறிவிக்கையை பொதுச் செயலாளர் ராதாரவி, சங்க உறுப்பினர்களுக்கு  தபால் மூலம் அனுப்பி வைப்பார் என்றும் கூறியுள்ளார்கள். 

Our Score