குறைவான உடையில் வந்து அவஸ்தைப்பட்ட நடிகை..!

குறைவான உடையில் வந்து அவஸ்தைப்பட்ட நடிகை..!

பட விழாக்களுக்கு வரும்போது நடிகைகள் கொஞ்சம் நாகரீகமாக உடையணிந்து வந்தால் பார்ப்பவர்களுக்கும் சங்கடம் வராது.. புகைப்படக்காரர்களுக்கும் பிரச்சினைகள் இருக்காது.

என் உடல். என் உடை.. என் இஷ்டம் என்று இஷ்டத்திற்கு உடையணிந்து வந்தால் புகைப்படக்காரர்கள் ‘புகைப்படம் எடுப்பதுதான் என் வேலை’ என்று சொல்லி அதை புகைப்படம் எடுக்கத்தானே செய்வார்கள்…? பின்பு ‘கேமிராவில் பதிவாகிவிட்டதே’ என்று வருத்தப்பட்டு என்ன புண்ணியம்..?

இன்று மதியம் ரவிபிரசாத் யூனிட் அலுவலகத்தில் அவர்களின் சொந்தப் படமான ‘என்னமோ ஏதோ’ படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு படத்தின் ஹீரோ கெளதம் கார்த்திக் மற்றும் ஹீரோயின்களான நிகிஷா பட்டேல் மற்றும் ராகுல்ப்ரீத் சிங் மூவரும் இயக்குநர், தயாரிப்பாளருடன் வந்திருந்தனர்.

ennamo-edho-movie-press-meet-

இதில் ராகுல்ப்ரீத்சிங் சென்ற பிரஸ் மீட்டிற்கு அலங்கோலமாக வந்தவர், இன்றைக்கு அடக்கமாக வந்திருந்தார். சென்ற பிரஸ் மீட்டில் அடக்கமாக வந்திருந்த நடிகை நிகிஷா பட்டேல் இன்றைக்கு அலங்கோலமாக வந்திருந்தார். என்னவொரு மாற்றம் பாருங்கள்..?

IMG_4623

நிகிஷா பட்டேல் சேரில் அமர்ந்தவுடன் அவருடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு அவருடைய உடை சின்னதாக இருந்தது.. புகைப்படக்காரர்கள் யோசிக்கக்கூட நேரம் கொடுக்காமல் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிட்டார்கள்.

இதைப் பார்த்து சில நிருபர்கள் பி.ஆர்.ஓ.விடம் சொல்ல.. அவர் அதை நிகிஷா பட்டேலின் காதில் ஓத.. அவருடைய முகத்தில் பட்டென்ற ஏமாற்றம்.. சங்கடம்.. ஒரு நிமிடம் கழித்து மெதுவாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டார். அதற்குள்ளாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இன்று இரவில் அல்லது நாளை காலை இணையத்தளங்களில் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறேன்..!

தேவையா இது..? எதுக்கு இப்படி டிரெஸ் பண்ணிட்டு வரணும்..? வந்து சங்கடப்படணும்..? அதை ஏன் நீங்க புகைப்படம் எடுக்குறீங்கன்னு மீடியாக்களை நோக்கியும் ஒரு விரல் நீள்கிறது. ‘அவங்க அப்படி வந்தா அதுக்கு நாங்கென்ன செ்யய முடியும்..?’ என்பார்கள் இவர்கள்.

இதில் யாரைக் குற்றம் சொல்வீர்கள்..? பொறுப்புணர்வு இரு தரப்பினருக்குமே வேண்டுமே..?!

Our Score