ரசிகர்களை யூகிக்கவிட முடியாத திருப்பங்கள், திறமையான நடிப்பு என்று ஒரு திரில்லர் படம் வெற்றி பெற பல்வேறு அடிப்படை தகுதிகள் உண்டு. அவற்றில் ஒன்றுகூட குறையாமல் ஒருங்கிணைந்து தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘நிபுணன்.’
அர்ஜுன், பிரசன்னா, வரலக்ஷ்மி, வைபவ, ஸ்ருதி ஹரிஹரன் என பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்த படத்தை இயக்கி இருப்பவர் அருண் வைத்தியநாதன்.
வித்தியாசமான விளம்பர யுத்தி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டு, ஊடகங்களின் சிறப்பான விமர்சனம் என்ற கூட்டணி இப்போது படத்தின் வெற்றியை உறுதியாகி உள்ளது.
285 காட்சிகளில் கடந்த வெள்ளியன்று துவங்கிய ‘நிபுணன்’ இன்று திங்கட்கிழமை அன்று மேலும் 30 காட்சிகளை கூடுதலாகப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆக்சன் கிங் அர்ஜுனின் 150-வது படம் என்பதால் ரசிகர்களிடையே படத்துக்கு ஒரு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அஜீத் குமாருடன் அர்ஜுன் நடித்திருந்த ‘மங்காத்தா’ திரைப்படத்துக்கு பிறகு இந்த திரைப்படத்தில அவருக்கு ரசிகர்களுக்கு இடையே அபிமானம் கூடியுள்ளது. பிரசன்னவின் நேர்த்தியான நடிப்பும், அவருடைய வசனத்தில் மேலோங்கி உள்ள நகைச்சுவையும், ஜோசப் என்கிற அவர் கதாபாத்திரத்தை ரசிகர்கள் அழைக்கும்போதே அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்று கொண்டனர் என்பது ஊர்ஜிதமாகிறது.
இசையமைப்பாளர் நவீணின் பின்னணி இசை மிகச் சிறந்த பாராட்டை பெற்றுள்ளது. “இத்தகைய படங்கள் வெற்றி பெறுவதன் மூலமாக திரை உலகம் எப்பேர்ப்பட்ட சவாலையும் சந்திக்கும்…” என்கின்றனர் திரை உலக வல்லுனர்கள்.