நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..! 

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..! 

தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப் படங்களை தந்து வரும் நடிகை நயன்தாரா தன் 65-வது படத்தில் மிகவும் வித்தியாசமான கதையம்சத்துடன் கலக்க வருகிறார்.

‘நெற்றிக்கண்’ எனும் தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தை நயன்தாராவின் காதலரான இயக்குநர் விக்னேஷ்  சிவன் தனது Rowdy Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இது இவரது முதல் தயாரிப்பாகும்.

இசை – கிரிஷ், ஒளிப்பதிவு - N.கார்த்திக் கணேஷ், கலை இயக்கம் - S.கமலநாதன், சண்டை இயக்கம் - C.மகேஷ், படத் தொகுப்பு - லாரன்ஸ் கிஷோர், ஒலியமைப்பு - விஜய் ரத்தினம், உடை வடிவமைப்பு – சைதன்யா, ராவ், தினேஷ் மனோகரன், வசனம் - நவீன் சுந்தரமூர்த்தி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா, ரேகா D one, இணை தயாரிப்பு – K.S.மயில்வாகணன், தயாரிப்பு மேற்பார்வை -  V.K.குபேந்திரன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு - G முருகபூபதி, M.மணிகண்டன்.

சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றி பெற்று கவனம் ஈர்த்த ‘அவள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இப்படத்தினை இயக்குகிறார்.

நடிகர் அஜ்மலும் இந்த ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறார். மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக, பலவித திருப்பங்கள் கொண்ட இப்படத்தில் பெரும் திருப்பம் ஏற்படுத்தும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜ்மல்.

தற்போதுவரை ‘நெற்றிக்கண்’ படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை படக் குழு முடித்துள்ளது. கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.