full screen background image

மீனாட்சி மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் ‘நேர்முகம்’..!

மீனாட்சி மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் ‘நேர்முகம்’..!

‘தயாரிப்பாளர்களின் இயக்குநர்’ என அழைக்கப்படும் முரளி கிருஷ்ணா ‘மிரண்டவன்’ படத்தை அடுத்து இயக்கும் படம் ‘நேர்முகம்’.

இதில் ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘அகம் புறம்’ ஆகிய படங்களின் நாயகி மீனாட்சி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பாண்டியராஜன், ஜின்னா, சிசர் மனோகர், நெல்லை சிவா போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜெகதீஷ் V. விஸ்வம், எடிட்டிங் – வில்சி, தயாரிப்பு நிர்வாகம் – தேனி எஸ்.முருகன், தயாரிப்பு – ஹைடெக் பிக்சர்ஸ் ரஃபி.

கேரளாவின் அடர்த்தியான காட்டுக்குள் செல்லும் ஏழு ஜோடிகள் மீண்டும் திரும்பினார்களா என்பதை வெகு விறுவிறுப்பாகவும், த்ரில்லராகவும் கலந்து கட்டி மிரட்டியிருக்கிறார் இயக்குனர் முரளி கிருஷ்ணா.

படம் பற்றி இயக்குநர் முரளி கிருஷ்ணா பேசும்போது, “எனது படங்களில் எப்போதுமே மனப் பிரச்சினைகளை மையப்படுத்திதான் கதை பயணப்படும். இந்த ‘நேர்முகம்’ படத்திலும் மனிதர்களுக்குள்ளேயும் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படும் விஷயங்களையும் அலசிவிட்டு தீர்வுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்பவர்கள் எவ்வகையான முடிவுக்கு உட்படுத்தபடுகிறார்கள் என்பதை காதல், செண்டிமெண்ட், த்ரில்லர், ஆக்‌ஷன், கிளாமர் கலந்து ஒரு கமர்சியல் கலவையாக சொல்லியுள்ளேன்.

இளைஞர்களையும், காதலர்களையும் டார்கெட் வைத்து உருவாக்கப்படும் இப்படம் குடும்பங்களையும் சுண்டி இழுக்கும் மெசேஜுடன் கிளைமாக்ஸைத் தொடும். என் படங்களில் இசைக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் இருக்கும். இப்படத்தில் நான்கு பாடல்களை எழுதி நானே இசையமைத்துள்ளேன். கேட்டவுடன் துள்ளும் இசையைக் கேட்கலாம். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது…” என்றார்.

Our Score