இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ்மேனனும், செல்வராகவனும் இணைந்து புதிய படம் ஒன்றில் பணியாற்றவுள்ளார்கள். இந்தப் படத்திற்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரெஜினா கசான்றா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல நட்சத்திரங்களும் படத்தில நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா, இசை சந்தோஷ் நாராயணன். இவர் செல்வராகவனுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். கலை விஜய் ஆதிநாதன், இணை தயாரிப்பு ஜேம்ஸ், தயாரிப்பு – க்லோ ஸ்டுடியோஸ் ப்ரோடெக்ஷன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் செல்வராகவன், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி. மதன் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார்.
இப்படத்தின் படபிடிப்பு இன்று காலை திருவான்மியூரில் ஒரு பங்களாவில் துவங்கியது. இன்று துவங்கிய படபிடிப்பை தொடர்ந்து மார்ச் இறுத்திக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கும் இந்த ‘நெஞ்சம் மறப்பத்தில்லை’ முற்றிலும் புது பாணியில் உருவாகிவரும் திரைப்படமாகும். இது வேறு எந்த படத்தின் ரீமேக்கும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.











