full screen background image

சென்சார் போர்டின் உத்தரவை ஏற்று குத்துப் பாடலை நீக்கிய தயாரிப்பாளர்..!

சென்சார் போர்டின் உத்தரவை ஏற்று குத்துப் பாடலை நீக்கிய தயாரிப்பாளர்..!

சென்சார் போர்டு ஒரு திரைப்படத்தில் ஏதாவது ஆட்சேபணைகளைத் தெரிவித்தால் அதனை எதிர்த்துப் பேசி, அல்லது அவர்களுக்குப் புரிய வைத்து, அல்லது அவர்களது சொல்லை ஏற்று அவர்கள் சொன்ன நீக்குதல்களை ஏற்றுக் கொண்டு படத்தைத் திரைக்குக் கொண்டு வரத்தான் நினைப்பார்கள் தயாரிப்பாளர்கள்.

சில சமயம் சில பாடல்களில் சில ஷாட்டுகள் மட்டும். சில படங்களில் வசனங்கள் என்று சென்சார் சொல்லும் திருத்தங்கள் நிறையவே. ஆனால் சென்சாரின் நிபந்தனைக்காக ஒரு பாடலையே தூக்கியெறிந்திருக்கிறார் ஒரு படத்தில்..

‘நீ என் உயிரே’ படத்தை ஸ்ரீவிஷாத்ரி புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதில் ஒரு குத்துப் பாடல் இடம் பெற்றுள்ளது.

‘சிங்கப்பூர்ல பொறந்தவ

சிட்னில வளர்ந்தவ

தமிழ்நாட்டு பார்டர்ல

திமிர் பிடிச்சு அலைஞ்சவ..”

என்ற காவியமான வரிகளைக் கொண்டு எழுதப்பட்டிருந்ததாம். பெங்களூரைச் சேர்ந்த சந்தனா என்ற நடிகை படு கவர்ச்சியாக ஆடியிருந்தாராம். இந்தப் பாடல் காட்சி முழுவதையும் நீக்கினால்தான் ‘யு’ சர்டிபிகேட் இல்லையேல்.. ‘ஏ’- தான என்று சென்சார் போர்டு உறுதியாக இருந்ததாம்.

எதிர்த்துப் பேசி பலனில்லாததால் ‘யு’ சர்டிபிகேட் நிச்சயமாகத் தேவை என்பதாலும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு அந்தப் பாடல் காட்சியைத் தூக்கிக் கடாசிவிட்டார்களாம்..

இப்போது ‘யு’ வாங்கியிருந்தாலும், ‘ஏ’ வாங்கியிருந்தாலும் வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்ற சூழல் இருப்பது இந்தத் தயாரிப்பாளருக்குத் தெரியவில்லை போலும்..

இத்தனை கஷ்டப்பட்டு எடுத்தது நம்ம கண்ணுக்குப் படாம போயிருச்சே.. அதான் நமக்கு ரொம்ப வருத்தமா இருக்கு..!

Our Score