சில மாதங்களுக்கு முன்பு பல திரை நட்சத்திரங்கள் படை சூழ ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் படத்தின் முதல் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
படத்தின் முதல் முன்னோட்டத்தை பார்த்த பல திரைப்பட முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் அந்தப் படக் குழுவினரை வெகுவாக பாராட்டினார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் இது போன்ற டீஸர், இதற்கு முன்பு வந்ததில்லை என்று அனைவரின் பாராட்டையும் பெற்றது இத்திரைப்படம்.
இந்தப் படத்தில் விமல், சமுத்திரகனி, கீதா, தேவா, பார்பி ஹண்டா, M.S. பாஸ்கர், இமான் அண்ணாச்சி, நமோ நாராயணன், சிங்கமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.
SG Films Pvt.Ltd. தயாரித்துள்ள இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார். ஒளிப்பதிவு – N.K.ஏகாம்பரம். பாடல்களை நாமுத்துக்குமார், சினேகன், லலிதானந்த், புரட்சிக்கனல் ஆகியோர் எழுதியுள்ளனர். படத் தொகுப்பை பிரவீன் K.L. மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து நடைபெற்று வந்த படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியதும், படத்தின் பின் தயாரிப்புப் பணி வேலைகள் விரைந்து நடைபெற்றன. இதன் பின்பு படத்தின் முதல் காப்பி தயாரானதும் தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர்கள், உயர் போலிஸ் அதிகாரிகள் மற்றும் IAS, IRS போன்ற மற்ற துறைகளில் இருக்கும் பிரபலங்களை அழைத்து சிறப்பு காட்சி மூலம் அவர்களுக்கு படத்தினை திரையிட்டுக் காட்டியது தயாரிப்பாளர் தரப்பு.
படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள், உயர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற துறை அதிகாரிகள் அனைவருமே இயக்குநரையும், படத்தில் பங்கு கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்களையும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும், வெகுவாகப் பாராட்டி, இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று வாழ்த்து கூறினார்கள்.
“படத்தின் கதைக்கு ஏற்றாற்போல் இன்னும் பொருத்தமான ஒரு தலைப்பை வைத்தால் நன்றாக இருக்குமே..?” என்று திரை பிரபலங்கள் ஆலோசனை கூற, நீண்ட கலந்தாய்வுக்கு பிறகு இப்போது படத்தின் தலைப்பை ‘காவல்’ என்று மாற்றியுள்ளார்கள்.
மேலும் படத்தின் இயக்குநர் நாகேந்திரனை வெகுவாகப் பாராட்டி, ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என்று செல்லமாகவும் வாழ்த்தினார்கள், படத்தைப் பார்த்த பிரபல இயக்குநர்களும், உயர் காவல்துறை அதிகாரிகளும்.
இவர்களின் வாழ்த்து பலித்தது போலவே, முதல் படம் வெளியாகும் முன்னரே, மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் பெரிய நடிகர்கள் இருவர் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் நாகேந்திரன்.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
Background Music – Tharan Kumar
Art Director – Videsh
Stunt Master – Silva
Costumer – Rangasamy
Costume Designer – Sangeetha
C.G –Gemini Lab
Stills – Manohar
Choreography – Rajusundaram, Kalyan, Dinesh and Bobby
PRO – Nikkil
DI – B2H
Designs – Kreative KKonect










