நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிக்கப்பபட்டுள்ளது. ‘கனெக்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ‘மாயா’ படத்தினை இயக்கிய இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்குகிறார்.
நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் இணைந்து தனது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவுடி பிக்சர்ஸ்’ சார்பில் இந்தப் படத்தைத் தானே தயாரிக்கிறார்.
பரபர தருணங்கள் நிறைந்த ஹாரர் திரில்லராக உருவாகவுள்ள இப்படம் ரசிகர்களுக்கு புத்தம் புதிய சினிமா அனுபவத்தை தரும்.
பாலிவுட் பிரபலமான அனுபம் கெர், நடிகர் சத்யராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும், இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் பங்கு கொள்கிறார்கள்.
படத்தை இயக்கவிருக்கும் அஷ்வின் சரவணன், காவ்யா ராம்குமாருடன் இணைந்து இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார், ரிச்சர்ட் கெவின் படத் தொகுப்பைக் கையாள்கிறார். கலை இயக்கத்தை ஸ்ரீராமன் & சிவசங்கர் கவனிக்கின்றனர்.
சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் M (Sync Cinema) ஆகியோர் ஒலி வடிவமைப்பு செய்கின்றனர். ராஜகிருஷ்ணன் M.R (சவுண்ட் மிக்ஸ்), “ரியல்” சதீஷ் (ஸ்டண்ட்ஸ்), அனு வர்தன் & கவிதா J (ஆடைகள்), சிதம்பரம் (மேக்கப்), சினேகா மனோஜ், அஸ்தா பிசானி (புரோஸ்தெடிக் கலைஞர்கள்), Realworks Studios (VFX), வர்ஷா வரதராஜன் (நடிகர் தேர்வு), கோமளம் ரஞ்சித் (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைனர்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுகிறார்கள்.
சுரேஷ் சந்திரா – ரேகா D one (மக்கள் தொடர்பு), Ra.சிபி மாரப்பன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), குபேந்திரன் V.K (அசோஸியேட் புரடியூசர்), மயில்வாகனன் K.S (இணைத் தயாரிப்பாளர்) ஆக பணியாற்ற உள்ளனர்.