லெஸ்பியன் கதாபாத்திரத்தில் கெளரி கிஷன்-அனகா நடிக்கும் மியூஸிக் ஆல்பம்

லெஸ்பியன் கதாபாத்திரத்தில் கெளரி கிஷன்-அனகா நடிக்கும் மியூஸிக் ஆல்பம்

சரிகமா ஒரிஜினல்ஸ் நிறுவனம் திரைப்பட நடிகைகளான கௌரி கிஷன் & அனகா நடிப்பில் ஓரின சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் ‘மகிழினி’ என்ற இசை ஆல்பத்தைத் தயாரித்துள்ளது.

இந்த ‘மகிழினி’க்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத, கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளார். விஷ்வகிரண் நடனம் அமைத்துள்ளார்.

வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள இந்த மகிழினி’ இசை ஆல்பம் வரும் நவம்பர் 22-ம் தேதியன்று சரிகமா ஒரிஜினல்ஸால் வெளியிடப்படும்.

இந்த ‘மகிழினி’யில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை புரிந்து கொள்ள வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ஆறு நாட்களில் படமாக்கப்பட்ட இந்த மகிழினி’ ஆல்பத்தின் கருவாகும்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவரும், ‘மகிழினி’ ஆல்பத்தின் இயக்குநருமான பாலசுப்ரமணியன் இந்த ஆல்பம் பற்றிக் கூறுகையில், “LGBT என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கையாளர்களைப் பற்றி நமது சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான் இந்த ‘மகிழினி’ ஆல்பத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.

சென்னையை சேர்ந்த மலர் (கௌரி) மற்றும் தில்லியில் இருந்து வரும் இந்துஜா (அனகா) பரத நாட்டியம் மீது கொண்ட பற்றால் சந்திக்கிறார்கள். ஒத்திகை ஒன்றின்போது அவர்களுக்குள் காதல் தீ பற்றுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதே இந்த ‘மகிழினி’ ஆல்பத்தின் கதை.

கௌரி மற்றும் அனகா ஆகியோரை மகிழினி’க்காக நாங்கள் அணுகியபோது, அவர்கள் அதை சரியாக புரிந்து கொண்டு உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். மிகவும் சிறப்பான நடிப்பை அவர்கள் இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

கோவிந்த் வசந்தாவின் இசை, மதன் கார்க்கியின் பாடல் வரிகள் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதனின் இசையமைப்பு ஆகியவை சொல்ல விரும்பிய கருத்தை சரியாக சொன்னதோடு, ஆல்பத்தை புதிய உயரத்திற்கு இட்டு சென்றுள்ளன.  விஷ்வகிரணின் நடன அமைப்பு மகிழினி’யின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும். அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பக்க பலம்.

இந்த ஆல்பத்தைத் தயாரிக்க முன் வந்த ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா வொர்க்ஸுக்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகிழினி’யை சரிகமா நிறுவனம் வெளியிடுவதில் ரொம்பவும் சந்தோஷம்…” என்றார்.

 
Our Score