full screen background image

பேஸ்புக்கில் நயன்தாரா இருக்காரா..? இல்லையா..?

பேஸ்புக்கில் நயன்தாரா இருக்காரா..? இல்லையா..?

நயன்தாரா பத்திரிகைகளு்க்கு பேட்டி கொடுப்பதில்லை.. தெலுங்கை தவிர மற்ற மொழிகளில் அவர் நடித்து வெளியாகும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில்லை. வெளி நிகழ்ச்சிகளிலும் தலை காட்டுவதில்லை. ஆனாலும் இவருடைய செய்தியில்லாமல் ஒரு சினிமா பத்திரிகையும் இல்லை.

nayanthara-25

மீடியாவுடனான தொடர்புதான் இப்படியென்றால் இணையத்திலும் இப்படித்தான்.. முகநூல் பிரபலமாகி வந்த வேளையில் ஒரு பேஜை ஆரம்பித்து, மின்னல் வேகத்தில் அதை மூடிவிட்டுப் பறந்தார். இப்போது 3 பேஜ்கள் அவருக்காக அவருடைய அடிப்பொடிகளால் நடத்தப்படுகிறது.

காணக் கிடைக்காத அவருடைய புகைப்படங்களை நிரப்பிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது நயனுடைய எண்ண ஓட்டங்கள் அதில் வந்து கொண்டுதான் இருந்தன.. இந்த மாதம் ஆரம்பித்த தன்னுடைய அதிகாரப்பூர்வமான பக்கத்திலும் துவக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை  போஸ்ட் செய்து வந்தாலும் சில பெர்சனல் செய்திகளையும் போட்டுக் கொண்டுதான் இருந்தார்.

திடீரென்று ஒரு நாள் காலையில் எங்கோ ஒரு ஹோட்டல் அறையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு காபிக்காக வெயிட்டிங் என்று சொல்லியிருந்தார். மின்னல் வேகத்தில் லைக்குகளும், கமெண்ட்டுகளும் வர.. அடுத்த 2 மணி நேரத்தில் அதனை நீக்கிவிட்டார்.

அடுத்து இவரும் பிரபுதேவாவும் இருக்கும் புகைப்படத்தை திடீரென்று some memories என்று எழுதி வெளியிட்டார். இதனை பிரபுதேவா தனது முகநூல் பக்கத்தில் ரீஷேர் செய்திருந்தது இன்னொரு காமெடி. இதனையும் 2 மணி நேரத்தில் நீக்கிவிட்டார்.

சமீபத்தில் திரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டி புகைப்படத்தில் சிம்புவுடன் இருப்பது போல காட்சிகள் வர.. மீண்டும் காதலோ என்று நினைத்து மீடியாக்கள் எழுதித் தள்ள.. “என்னுடைய கடந்த கால நினைவுகள் எனக்கு நிறைய பாடத்தையும், அதிர்ச்சி ப்ளஸ் அயர்ச்சியையும் கொடுத்திருக்கின்றன. நிறைய இழந்திருக்கிறேன். ஆனாலும் வாழ்க்கை இப்போதும் இனிமையாகத்தான் இருக்கிறது..” என்கிற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் 3 வரிகளில் கமெண்ட் போட்டிருந்தார்.

இன்றைக்கு பார்த்தால் அந்த போஸ்ட்டையே காணவில்லை. அதற்கு பதிலாக அந்த போட்டோவில் சிம்பு இல்லாதது போல போட்டோஷாப்பில் திருத்தம் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் தன்னுடைய நீண்ட நாள் வழிகாட்டியான ஒரு அம்மையாரை நீயில்லாமல் நானில்லை.. அன்னையர் தினத்தில் உன்னை நினைவு கூர்கிறேன் என்று கமெண்ட் போட்டு புகைப்படம் போட்டிருக்கிறார். இதை எப்போது நீக்குவார் என்று தெரியவில்லை..!

இந்த 3 பேஜ்களிலும் மாறி மாறி உள்குத்தை போல கமெண்ட்டுகள் வந்தாலும் இது நயன்தாராதானா என்கிற சந்தேகம் அனைவருக்குமே வருகிறது. ஆனால் நமக்கு வரவில்லை. அவருக்கு நன்கு தெரிந்தவர்கள் யாரோதான் இதனை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இடையில் நயன்தாரா இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று நினைக்கிறோம்..

இனிமேல் உடனேயே Copy-Save-தான்..!

Our Score