ஏதாவது ஒரு மொழியில் ஒரு படம் ஹிட்டடித்தால் அதனை வேறுவேறு மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம்தானே..? சூப்பர் டூப்பர் ஹிட்டான ஹிந்தி ‘கஹானி’யை இதே எண்ணத்துடன்தான் தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார்கள்..
ஹிந்தி ‘கஹானி’யில் வித்யா பாலன் ஒரு கர்ப்பிணிப் பெண் கேரக்டரில் நடித்திருந்தார். துர்கா பூஜை சமயத்தில் கொல்கத்தா வரும் வித்யாபாலன், காணாமல் போன தனது கணவனைத் தேடி கண்டுபிடிக்கிறார். அது எப்படி என்பதுதான் கதை..! திரில்லர் வகையில் எதிர்பாராத முடிவைச் சொல்லி ‘அட’ என்று ஆச்சரியப்படுத்தியது இப்படம். பாக்ஸ் ஆபீஸில் 17 மடங்கு லாபத்தைச் சம்பாதித்து கொடுத்த படம் இது.. விட்ருவாங்களா..?
முதலில் தெலுங்குக்கு நயன்தாராவை வைத்து படமெடுத்தார்கள். ‘அனாமிகா’ என்று பெயரிட்டுவிட்டார்கள். பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா படத்தை இயக்கியிருக்கிறார்.ஹர்ஸவர்த்தன ரானே, பசுபதி, வைபவ் நடிச்சிருக்காங்க. கீரவாணி இசையமைச்சிருக்காரு.
இப்போது நயன்ஸுக்கு தமிழிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் தமிழில் யாருமே இதுவரையில் அந்தப் படத்திற்கு ரீமேக் உரிமை கேட்காததும் ஒரு வசதியாகப் போய்விட.. இப்போது தெலுங்கில் இருந்து தமிழுக்கு அப்படியே டப்பிங் செய்யவிருக்கிறார்கள்.
என்ன பெயர் வைப்பது என்றுதான் கொஞ்ச நாளாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் ‘நீ எங்கே என் அன்பே’ என்று கதைக்குப் பொருத்தமான, கச்சிதமான தலைப்பை வைத்திருக்கிறார்கள். நயன்ஸின் நடிப்பை பார்க்கவே ஒரு கூட்டம் இங்கே இருக்கு. ஹீரோவும் அவர்தான்.. ஹீரோயினும் அவர்தான் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடிள்ளது என்பதும் உண்மைதான்..! வரும் பிப்ரவரி 28-ம் தேதி தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படம் ரிலீஸாகுதாம்..