ஆண்ட்ரியாவின் வீடியோ ஆல்பம் வெளியீடு..!

ஆண்ட்ரியாவின் வீடியோ ஆல்பம் வெளியீடு..!

நடிப்பை மட்டும் வைச்சிருந்தா இந்தக் காலத்துல 5 வருஷத்துக்கு மேல சினிமா பீல்டுல குப்பை கொட்ட முடியாதுன்னு இப்போ இருக்கிற நடிகைகளுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு..!

ஆண்ட்ரியாவுக்கு நடிப்போட நல்லா பாடவும் வரும்ன்றதை தமிழ்ச் சினிமா ரசிகர்களைத் தவிர மற்ற சினிமாக்காரர்கள்தான் தெரிஞ்சு வைச்சிருக்காங்க.. சில படங்களில் ஒரு சில பாடல்களை அவரை பாட வைத்து ஏதோ தங்களுடைய பப்ளிசி்ட்டிக்காக பயன்படுத்திக் கொண்டனர்..!

மலையாளத்தில் சில படங்களில் பாடல்களை பாடியிருக்கும் ஆண்ட்ரியா முழு நேர பாடகியாக ஆகவும் விருப்பம் தெரிவிக்கும் அளவுக்கு இதில் மிக ஈடுபாட்டுடன் இருக்கிறார். இந்த நேரத்தில் இயக்குநர் ராம் இயக்கி வரும் தரமணி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. 

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆண்ட்ரியாவின் டேப்பில் இருந்த ஒரு பாடலை கேட்ட ராம், அதில் சொக்கிப் போனாராம்.. கேட்ட மாத்திரத்திலேயே இதனை வீடியோ ஆல்பமாக படமாக்கினால் என்ன என்று திடீரென்று முடிவெடுத்து அன்றைக்கே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தரமணி ரயில்வே ஸ்டேஷனில் ஆண்ட்ரியாவையும் அதில் நடிக்க வைத்து ஷூட் செய்துவிட்டார். முழுக்க முழுக்க ஆங்கிலப் பாடலாக இருந்தாலும் எடு்ததவிதம் ஆங்கில ஆல்பங்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்விதமாக இருக்கிறது..!

ஆல்பத்தை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட இயக்குநர் இமயம் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். ஆங்கிலத்தில் இருந்தாலும் எடுக்கப்பட்டவிதம் ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கிறது என்று பாராட்டினார் பாரதிராஜா. ஆண்ட்ரியா மிகத் திறமையானவர். விஸ்வரூபம் ஷூட்டிங்கின்போதே அவரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். இன்னமும் பல உயரங்களுக்கு போக வேண்டியவர்.. நிச்சயம் செல்வார் என்று வாழ்த்துத் தெரிவித்தார் கமல்ஹாசன்.  

படத்தின் இயக்குநர் ராம் வரவேற்புரையாற்ற.. படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார் நன்றி தெரிவித்தார்.. படத்தில் நடித்த வசந்த் ரவி, மற்றும் குழந்தை நட்சத்திரம், பாடலை எழுதி, பாடி, நடித்த நடிகை ஆண்ட்ரியா ஆகியோரும் பேசினார்கள்.

Our Score