விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த ‘நட்சத்ரா’ படம் 

விதார்த் நடிப்பில் மாயங்களும் மர்மங்களும் நிறைந்த ‘நட்சத்ரா’ படம் 

தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும்  லாபம் தரும் நடிகராக,  தனது வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் மூலம்  தொடர் வெற்றி படங்களைத் தந்து வருகிறார் நடிகர் விதார்த்.

தற்போது வெளியாகியுள்ள அவரது அடுத்த படமான ‘நட்சத்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரையுலகத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் பிரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ‘நெடுநல்வாடை’ புகழ் அஞ்சலி நாயர் விதார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சென்ட்ராயன், சந்தோஷ் பிரதாப், சங்கிலி முருகன், ‘ஆடுகளம்’ நரேன், ல‌ஷ்மி ப்ரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – N.S.உதயகுமார், இசை – பரத் ராகவன், படத் தொகுப்பு – மணி குமரன், கலை இயக்கம் – A.B.R., சண்டை இயக்கம் – ராஜசேகர், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, எழுத்து, இயக்கம் – மனோஜ் ராம்.

பாதுகாவலன் உடையில் மாயங்களை துப்பறியும்விதமாக விதார்த் இருக்க பின்னணியில் பெண் ஆவிகள் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

படம் குறித்து இயக்குநர் மனோஜ் ராம் பேசும்போது, “மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த ‘நட்சத்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஹாரர் கலந்து பயப்படுத்தும் அம்சமும் கொண்டிருக்கும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் பற்றி படக் குழு கூறுவதைவிட நேரில் திரையரங்கில் அந்த  ஆச்சர்யங்களை ரசிகர்கள் அனுபவிப்பதே சரியானதாக இருக்கும். ‘நட்சத்ரா’ படம் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களுக்கு மர்மங்கள் நிறைந்த மாய அனுபவத்தை தரும்.

தயாரிப்பாளர்கள்  பிரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது இருவரும் என் மீதும், திரைக்கதை மீதும் வைத்த நம்பிக்கையால் மட்டுமே இத்திரைப்படம் சாத்தியமானது. இன்று இப்படம் திட்டமிட்டபடியே மிகச் சரியான முறையில் உருவாகி வந்திருப்பதில் படக் குழு மிகுந்த மிகிழ்ச்சியில் இருக்கிறது.

விதார்த்தின் அர்ப்பணிப்பும், அவர் நடிப்பின் மீது கொண்டிருக்கும் தீவிர காதலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேம்களிலும் பிரதிபலிக்கிறது. அவரது கதாப்பாத்திரம் சில வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று.  படம் முடிந்த பிறகு அனைவரது மனங்களில் நீங்காத இடம் பிடிக்கும்வகையில் அவரது கதாப்பாத்திரம் இருக்கும்.

தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தேதிகள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்…” என்றார்.

Our Score