full screen background image

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் ‘கால் டாக்ஸி’.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் ‘கால் டாக்ஸி’.

கே.டி.கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கபிலா தயாரித்து வரும் திரைப்படம் ‘கால் டாக்ஸி’.

இந்தப் படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க… அவருக்கு ஜோடியாக ‘மெர்லின்’, ‘மரகத காடு’, ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’,  ‘ஜீவி’, போன்ற  படங்களில்  நடித்த அஸ்வினி நடிக்கிறார். 

மேலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதன் பாப், இயக்குநர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், ‘பசங்க’  சிவகுமார்,  முத்துராமன், ‘பெல்லி’ முரளி,  சந்திரமௌலி,  ‘போராளி’ திலீபன்,  சேரன் ராஜ், அஞ்சலி தேவி  ஆகியோர்  நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- எம்.ஏ.ராஜதுரை,  பாடல்கள், இசை – பாணன், படத் தொகுப்பு – டேவிட் அஜய்,  நடன இயக்கம் –  இராபர்ட்,  இருசன், சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.ஹரிமுருகன், மக்கள் தொடர்பு – குமரேசன்,  எழுத்து, இயக்கம் – பா.பாண்டியன்.

‘கால் டாக்ஸி’ படம் பற்றி இயக்குநர் பா.பாண்டியன் பேசும்போது, “நாடு முழுவதும் கால் டாக்ஸி  டிரைவர்கள்  தொடர்ந்து  கொலைகள்  செய்யப்படுவதின்  பின்னணியில்  உள்ள  ஒரு உண்மைச்  சம்பவத்தை  மையமாக  வைத்து,  சஸ்பென்ஸ்  திரில்லர்  கலந்த திரைப்படமாக இது உருவாகியுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது…” என்றார்.

Our Score