கபி & அபி சித்திரக் கண்கள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘நனையாத மழையே.’
இந்தப் படத்தில் அருண் பத்மநாபன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். கதாநாயகியாக பரத நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற வைதேகி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 49 -O என்ற படத்தில் நடித்திருக்கிறார். மற்றும் அனுமோகன், சங்கர், நாராயணசாமி, பொள்ளாச்சி நாச்சிமுத்து, கோவை சிவா, மாஸ்டர் கபிலேஷ் கணபதி, செல்வி சக்தி ஷிவானி ஆகியோருடன் கானாபாலாவும் முக்கிய வேடமேற்கிறார்.
ஒளிப்பதிவு – கிச்சாஸ் [இவர் ‘அரண்மனைக் கிளி’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.]
இசை – சௌந்தர்யன்
பாடல்கள் – நா.முத்துகுமார், அறிவுமதி, சீர்காழி சிற்பி
நடனம் – தினேஷ்
ஸ்டண்ட் – ஸ்பீட் மோகன்
எடிட்டிங் – V.ஜெய்சங்கர்
தயாரிப்பு மேற்பார்வை – சிவா
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார் மகேந்திரகணபதி.
படம் பற்றி பேசிய இயக்குநர் மகேந்திரகணபதி “இதுவும் ஒரு காதல் கதைதான். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்று சொல்வார்கள். அதாவது, ஒரு குடும்பம் விருத்தி அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான். அதே நேரத்தில் ஒரே ஒரு பொய் ஒரு கல்யாணத்தையே நிறுத்திவிடும் என்பதும் நிஜம்தானே.
எல்லா மழை துளியுமே பூமியை தொட்டவுடன் அதில் ஏதாவது ஒரு துளி ஏதோ ஒரு இலக்கை நோக்கி போகும். இந்த நனையாத மழையே – அந்த மழைத்துளி எந்த இலக்கை நோக்கி போகிறது என்பதைச் சொல்வதுதான். படத்தில் ஆறு அருமையான பாடல்கள் இருக்கின்றன. இவை நிச்சயம் ஹிட் ஆகும்..” என்றார்.