இன்று 14-11-2014 வெள்ளிக்கிழமையன்று 7 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.
1. திருடன் போலீஸ்
கேபிட்டல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனமும் கெனன்யா பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றன. இதில் அட்டக்கத்தி தினேஷ், நிதின் சத்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், ராஜேஷ், ரேணுகா, உமா பத்மநாபன், முத்துராமன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு சித்தார்த். எடிட்டிங் கே.எல்.பிரவீன். யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். கார்த்திக் ராஜூ என்ற புதுமுகம் படத்தை இயக்கியிருக்கிறார்.
2. விலாசம்
Sree Sanaa Films தயாரித்திருக்கும் இப்படத்தில் பவன் ஹீரோவாக நடித்திருக்கிறார். சனம் ஷெட்டி ஹீரோயின். மேலும் ஆடுகளம் நரேன், சுஜிபாலா, நான் கடவுள் ராஜேந்திரன், அருள்தாஸ், பாவா லட்சுமணன், ஷர்மிளா, போஸ் வெங்கட், சேத்தன், ஷர்மிலி, ராஜ்கபூர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு-யு.கே.செந்தில்குமார். ரவி ராகவ் இசையமைத்திருக்கிறார். பவித்ரன் பிரசாந்த் தயாரித்திருக்கிறார். எழுதி, இயக்கியிருப்பவர் பா.ராஜகணேசன்.
3. புலிப்பார்வை
வேந்தர் புரொடெக்சன்ஸ் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. தமிழீல விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருக்கிறார்கள். வேந்தர் மூவிஸ் மதன் இதில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சத்யா என்ற சிறுவன் பாலச்சந்திரனாக நடித்திருக்கிறஆர். சாய் மகேஷ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவின்காந்த் எழுதி, இசையமைத்து, இயக்கியிருக்கிறார்.
4. ஞானகிறு்க்கன்
தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் சி.தங்கம்மாள் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். டேனியல் பாலாஜி, ஜெகா, செந்தி, அர்ச்சனா கவி, சுஷ்மிதா, தம்பி ராமையா ஆகியோர் நடித்திருக்கின்றனர். எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நா.முத்துக்குமார், அறிவுமதி, கபிலன், யுகபாரதி, மோகன்ராஜன் எழுதிய பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். ராஜாமுகமது எடிட்டிங் செய்திருக்கிறார். இளையதேவன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
5. அப்புச்சி கிராமம்
Eye Catch Multimedia Presents நிறுவனத்தின் சார்பில் விஷ்ணு முரளி, வி.செந்தில்குமார் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். இதில் சுவாசிகா, நாசர், கிட்டி, ஜி.எம்.குமார், கஞ்சா கருப்பு, சுஜா, ஜோ மல்லூரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜி.கே.பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சி.விஷால் இசையமைத்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் வி.ஐ.ஆனந்த்.
6. முருகாற்றுப்படை
சிகரம் விஷுவல் மீடியா சார்பில் ஆர்.சரவணன் தயாரித்து ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.
நவீக்கா என்ற புதுமுகம் ஹீரோயின். மேலும் வி.எஸ்.ராகவன், ராஜசிம்மன், ரமேஷ்கண்ணா, பத்மநாபன், தருண் மாஸ்டர், தேவதர்ஷிணி ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.எல்.ரமேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். மோகன்ராஜன் பாடல்களை எழுத கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருக்கிறார். கே.முருகானந்தம் எழுதி, இயக்கியிருக்கிறார்.
7. அன்பென்றாலே அம்மா
எம்கேஎஸ் மூவிஸ் சார்பில் எம்.கே.எஸ்.கருப்பசாமி தயாரித்து எழுதி, இயக்கியிருக்கும் படம் இது. நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற அய்யா வழி வைகுண்டராசனை பின்பற்றுபவர்களின் பக்தி படம் இது.