full screen background image

அரசியல் கட்சிகளின் தேடுதல் வேட்டையில் நமீதா..!

அரசியல் கட்சிகளின் தேடுதல் வேட்டையில் நமீதா..!

சினிமாவில் நுழைந்து நாலு காசு சேர்த்துவிட்டு, பக்கத்துத் தெருவரைக்கும் புகழ் வந்துவிட்டால் அடுத்து கூடவே வருவது அரசியல் ஆசை.. பொதுவாக அது நாயகர்களுக்குத்தான் அதிகம் வரும். இப்போது நடிகைகளுக்கும் அதிகமாகவே வந்து கொண்டிருக்கிறது..

நமீதா தனது நடிப்பால் அல்ல உடல் நடிப்பாலேயே தமிழக ரசிகர்களை கொள்ளை கொண்டவர். ஆடிய ஆட்டம் முடிந்துபோய் இப்போது வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட்டில் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அவ்வப்போது சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமிழையும், தமிழர்களையும் சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. ஏதாவது ஒரு கட்சியிலாவது வெயிட்டா நம்மளை கூப்பிட்டு கவனிச்சு பிரச்சாரத்துக்கு கூப்பிட மாட்டாங்களான்னு ஏங்கிக்கிட்டிருக்காரு..

இது பற்றி பிரஸ்ஸுக்கு கொடுத்திருக்கும் பேட்டியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி. 3 கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. எந்தக் கட்சிகள்ன்னு இப்போ சொல்ல முடியாது.. எனக்கு தேசிய அரசியலில் ஆர்வமில்லை. என் உயிர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தமிழ்நாட்டில்தான் பிரியவேண்டும்.

16 வயதில் நான் குஜராத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். பெரும்பாலான கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். நான்கைந்து வருடங்களில் என்னை, தமிழ் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். நான் சென்னைக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது. இன்னும் என்னை, ரசிகர்கள் மறக்கவில்லை. தமிழக மக்கள், என்மீது அன்பு செலுத்துகிறார்கள். பாசமாக பழகுகிறார்கள். பதிலுக்கு அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதை அரசியல் மூலம் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.

டெல்லி மாணவி நிர்பயா கற்பழிப்பு சம்பவத்துக்குப் பின், இந்திய மக்கள் மனதில் நிறைய மாற்றமும், விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த தேர்தலில் நிறைய ஓட்டுகள் பதிவாகும். ஒரு சின்ன கறுப்பு புள்ளிக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதை இந்த தேர்தலில் தெரிந்து கொள்ளலாம்…” என்று கூறியுள்ளார் நமீதா.

எல்லாம் சரிதான் அம்மணி.. அரசியல், கட்சின்னா முதல்ல அதுல சேர்றவங்களுக்கு்ன்னு கொஞ்சம் கொள்கை இருக்கணும்.. 3 கட்சில கூப்பிட்டிருக்காங்கன்னு சொல்லும்போதே இது கொள்கை சம்பந்தமானதில்லைன்னு நல்லாவே தெரிஞ்சு போச்சு.. கலக்குங்க.. கலக்குங்க..

இப்பத்தான் அரசியலும் சினிமா மாதிரி 9 டூ 6 வேலையா போச்சு.. அங்க ஷூட்டிங்குக்கு போனா காசு.. இங்க பிரச்சாரத்துக்கு போனா காசு.. அவ்ளோதான்..

தமிழகத்து மக்கள் எவ்வளவோ தாங்கிட்டாங்க.. இதையும் கொஞ்சம் தாங்கிர மாட்டாங்களா..?

Our Score