full screen background image

இனம் திரைப்படம் மார்ச் 28-ல் ரிலீஸ்..!

இனம் திரைப்படம் மார்ச் 28-ல் ரிலீஸ்..!

சந்தோஷ் சிவன் இயக்கிய ஈழம் சம்பந்தமான இனம் திரைப்படம் வரும் மார்ச் 28-ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநரான சந்தோஷ்சிவன் இயக்கியிருக்கும் ஈழம் சம்பந்தமான திரைப்படம் இனம். ஈழப் பிரச்சினை.. ஈழப் போர்.. சுனாமி தாக்குதல் என்று மும்முனை அமைப்பை கதையம்சமாக கொண்ட இப்படம் பரவலாக தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது..

சரிதா, கருணாஸ், ஜானகி, சுகந்தா, கரண், ராகினி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவனே ஒளிப்பதிவு செய்ய டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். விஷால் இசையமைத்திருக்கிறார்.

ஈழ ஆதரவாளர்கள் இந்தப் படம் எந்தவிதத்தில் யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறார்கள். முதலில் எங்களுக்குத் திரையிட்டு காண்பிக்க வேண்டுமென்றெல்லாம் கூவிக் கொண்டிருந்தார்கள். இவர்களை சமாளித்து இந்தப் படம் ரிலீஸாக வேண்டிய கட்டாயமும் உண்டு.

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி இந்தப் படத்தை வாங்கி தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறார். இந்தப் படம் எனக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கவில்லையென்று போனாலும் பரவாயில்லை.. நல்ல பெயரை கொடுக்கும். அதுவே எனக்குப் போதும் என்று பிரஸ் மீட்டிலேயே சொல்லிவிட்டார்..

ஆக.. ஒரு இயக்குநருக்குக் கிடைக்கும் பெருமை.. இன்னொரு இயக்குநருக்கு பாராட்டாகக் கிடைக்கப் போகிறது.. காத்திருப்போம்..!

Our Score