full screen background image

“தயாரிப்பாளர்களைவிட டிவிக்காரர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்..” – நக்கீரன் ஆசிரியர் கோபாலின் பேச்சு..

“தயாரிப்பாளர்களைவிட டிவிக்காரர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்..” – நக்கீரன் ஆசிரியர் கோபாலின் பேச்சு..

நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘கிருமி’ திரைப்பட விழாவில் நக்கீரன் ஆசிரியர் கோபாலும் கலந்து கொண்டார். அப்போது இன்றைய திரையுலகம் பற்றி அவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

IMG_9865 

அவர் பேசும்போது, ”இந்தப் படத்தைத்  தயாரிக்கும் ஜெயராமன் எனக்கு நெருங்கிய நண்பர்நான். அண்ணன் ரஜினியைப் பார்க்கும்போதெல்லாம் அவரையும் பார்ப்பேன். ஒரு இடத்தில் இருக்க மாட்டார். ஓடிக் கொண்டே இருப்பார். ஜெயராமன் அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குபவர்.

மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ சமூக நோக்குள்ள படம் அதில் இப்படி ஒரு சமூகத்தோடுதான் வாழ்ந்து வருகிறோம் என்று அழகாகச் சொல்லியிருப்பார். அந்த மணிகண்டனின் கதை என்பதால் இந்தக் ‘கிருமி’யும் சமூகம் சார்ந்த சிந்தனையோடுதான்  இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. 

இன்று படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா..? இல்லை..! ஆனால் டிவிக்காரர்கள் படத்தை வைத்து சம்பாதிக்கிறார்கள். ‘பாட்ஷா’ படத்தை தயாரித்த அண்ணன் ஆர்.எம்.வீ . இப்போது வீட்டில்தான் இருக்கிறார். ஆனால் சன் டிவியில் ‘பாட்ஷா’ படத்தை போடுகிறபோதெல்லாம் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள். ‘கில்லி’ படத்தை தயாரித்த  அண்ணன் ஏ.எம்.ரத்னம் வீட்டில்தான் சாதாரணமாக இருக்கிறார். ஆனால் சன் டிவியில் ஒரு நாள் ‘கில்லி’யை திரையிட்டு ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விடுகிறார்கள். நிலைமை இப்படித்தான் இருக்கிறது.

இந்தப் படத்தை தயாரிக்கும் ஜெயராமன் நேர்மையாக சம்பளத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார்கள். நேர்மையாக உள்ளவர்கள் வெற்றி பெற வேண்டும். தயாரிப்பாளர் ஜெயராமன் வெற்றி பெற நக்கீரன் என்றும் துணை நிற்கும்…” என்றார்.

Our Score