தாணு தயாரிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் ‘நையப்புடை’..!

தாணு தயாரிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் ‘நையப்புடை’..!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தையும், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தையும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே.

இவற்றோடு சேர்ந்து இப்போது மூன்றாவது படமாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கும் ‘நையப்புடை’ என்ற படத்தையும் தயாரிக்கிறாராம்.

இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். கதாநாயகனாக பா.விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ‘ஆரோகணம்’ விஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தாஜ்நூர் இசையமைக்க, ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுக இயக்குனர் விஜய் விக்ரம் என்பவர் இயக்குகிறார்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் தாணு கூறுகையில், “ஒரு ஆக்ஷன் படத்தை வித்தியாசமாகவும், முழுக்க முழுக்க நகைசுச்வையாகவும் சொல்லியிருக்கும் படம்தான் இது. இயக்குனர்கள் பவித்ரன், ஷங்கர், ராஜேஷ் பொன்ராம் இவர்களை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் பட்டறையில் இருந்து புறப்பட்டு வரும் அடுத்த இயக்குனர் விஜய் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் மகன் விஜய், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரையும் ஹீரோவாக வைத்து படமெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பெரிய நடிகராகவும் வலம் வருவார் என்பது நிச்சயம்..” என்றார்.

Our Score