full screen background image

‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் ‘நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ராஜபாட்டை’

‘புதுயுகம்’ தொலைக்காட்சியில் ‘நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ராஜபாட்டை’

‘புதுயுகம்’ தொலைக்காட்சி மற்றும் நடிகை ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் ஆகிய தகுதியும், திறமையும் வாய்ந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து நாடகக் கலைக்கு அர்ப்பணிப்பாக வழங்கியிருக்கும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி ‘நடிகவேளின் ராஜபாட்டை’.

M_R_RADHA

நடிகவேள் திரு.M.R.ராதா அவர்களின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் அவர் நேசித்த நாடகக் கலையை மையமாக வைத்து தமிழகம் முழுவதும், நாடகப் போட்டியை இந்த இரு நிறுவனங்கள் இணைந்து நடத்தின.

இதில் வெற்றி பெற்ற முதல் 3 அணிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், 75,000 மற்றும் 50,000 ரூபாயினை பரிசாக வழங்கினார்கள்.

பிரமாண்டமாக நடந்த இந்த நாடக விழாவின் இறுதி போட்டிக்கு  நடிகர்-இயக்குநர்.திரு.கே.பாக்யராஜ், நடிகை ஸ்ரீபிரியா, நடிகை ராதிகா சரத்குமார், மற்றும் திரு.கிரேஸி மோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த அணியை தேர்வு செய்தனர்.

இந்த நாடக விழாவின் பரிசளிப்பு நிகழ்ச்சியில்  நடிகர் சரத்குமார், நடிகர் ராதாரவி, நடிகர் ராம்கி, நடிகர் சிவக்குமார், நடிகைகள் சரோஜாதேவி, நிரோஷா, நடிகர் பார்த்திபன், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் கே.ஸ்.ரவிக்குமார், விக்ரமன், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் எண்ணற்ற திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை நடிகர் பரத் மற்றும் நடிகை நீலிமா ராணி இருவரும் தொகுத்து வழங்கினார்கள். விரைவில் புதுயுகம் தொலைக்காட்சியில்  இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

Our Score