full screen background image

நடன இயக்குநர் சுவர்ணா இயக்கியிருக்கும் ‘நாதிரு தின்னா’ படம்

நடன இயக்குநர் சுவர்ணா இயக்கியிருக்கும் ‘நாதிரு தின்னா’ படம்

தமிழ்த் திரையுலகத்தில் நடன  இயக்குநராக சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் சுவர்ணா.

இவர் தற்போது நாதிரு தின்னா’ என்ற புதிய படத்தை எஸ்.எஸ்.ட்ரீம் கலர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து தமது இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் கலைஞர்களை நான்கு மாநிலங்களில் நட்சத்திர தேர்வு நடத்தி, தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் சுவர்ணா.

சபயாச்சி மிஸ்ரா, ஷ்யாம், மகி, ராகுல் நால்வருடன் ராதிகா ப்ரீத்தி, விஜயலட்சுமி, ஹரிகா, ரக்ஷா, அப்பாஜி ஆகியோருடன் தருண் மாஸ்டரும் நடித்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், நடன  இயக்கம் – சுவர்ணா, ஒளிப்பதிவு – ஸ்ரீதர் நர்லா,  இசை – முரளீதர் ராகி, பாடல்கள் – வின்சென்ட் ஜெயராஜ், விஜயகுமார், பத்திரிகை தொடர்பு – விஜயமுரளி.

பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலும், காதலித்து இணையும் திருமணத்திலும் நடைபெறும் குடும்ப சிக்கல்களை வைத்து இளமை ததும்ப நகைச்சுவையுடன் கூடிய ஒரு வித்தியாசமான படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Our Score