இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..!

இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..!

‘பையா’, ‘அஞ்சான்’, ‘ரஜினி முருகன்’, ‘மஞ்சப் பை’, ‘வழக்கு எண் 18/9’, ‘தீபாவளி’, ‘கும்கி’, ‘உத்தமவில்லன்’ போன்ற பல வெற்றி படைப்புகளை தந்த ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான என்.லிங்குசாமி தயாரிக்கும் திரைப்படம் ‘நான்தான் சிவா.’ 

‘ரேணிகுண்டா’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம். இதையடுத்து ’18 வயசு’ மற்றும் விஜய சேதுபதி நடித்த  ‘கருப்பன்’ போன்ற படங்களை இயக்கினார். மூன்றாவதாக இந்த ‘நான்தான் சிவா’ படத்தையும் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக ‘உதயம் NH4’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு – என்.சுபாஷ் சந்திரபோஸ், இயக்குநர் – ஆர்.பன்னீர் செல்வம், ஒளிப்பதிவு – பி.ராஜசேகர், சண்டை இயக்கம் – ராஜசேகர், நடன இயக்கம் – தினேஷ், மக்கள் தொடர்பு – ஜான்சன், பாடல்கள் – யுகபாரதி, இசை – டி.இமான், கலை இயக்கம்- சீனு, தயாரிப்பு மேலாளர் – ஜி.ஆர்.நிர்மல், படத் தொகுப்பு – ஆண்டனி, இணைத் தயாரிப்பு  – ஜி.ஆர்.வெங்கடேஷ்.

PHOTO-2020-05-20-10-23-50

இந்த ‘நான்தான் சிவா’ படம் பற்றி இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் பேசும்போது, “ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை.

இந்தக் கதையை காதல் மற்றும் கமர்ஷியல் கலந்து  கூறியிருக்கிறோம். இந்தப் படத்தின் படபிடிப்பு கும்பகோணம், திருச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. இப்போது அடுத்தக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்று இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சோனி இசை நிறுவனத்தின் ஆன்லைனில் வெளியாகிறது…” என்றார். 

Our Score