full screen background image

திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ திரைப்படம்

திருக்குறளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ திரைப்படம்

பனிமதி பிலிம் புரொடக்சன் சார்பில் எம்.ஜி.ராஜா தயாரித்துள்ள புதிய தமிழ்த் திரைப்படம் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்.’ 

சின்ன பட்ஜெட் படமான இதில் சிறிய, புதிய கலைஞர்கள்தான் அதிகம் பேர் நடித்துள்ளனர். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த LIC முகவரான M.G.ராஜாதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்.

இந்தப் படத்தில் ராஜ், காந்தராஜ், சமர்த்தினி, பனிமதி, தமிழ், சுந்தரி, செல்வி, ரத்னகலா ஆகியோர் நடித்துள்ளனர்.

வெகு நாட்களுக்கு பிறகு அனைவரும் பார்க்கும்படியான குடும்பப் படமாக வளர்ந்துள்ள இப்படத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிந்து வந்த காந்தராஜ், நகைச்சுவை வேடத்தில் படம் முழுவதும் வருகிறார்.

தயாரிப்பு – M.G. ராஜா. இணை தயாரிப்பு – P. தனபால், G. இளவரசி. தயாரிப்பு மேற்பார்வை – P. தேவன். எழுத்து இயக்கம் – கோ. செந்தில்ராஜா. ஒளிப்பதிவு – புன்னகை வெங்கடேஷ். இசை – R. சிவசுப்பிரமணியன். இசை ஒருங்கினைப்பு – டோனி பிரிட்டோ. மக்கள் தொடர்பு – நிகில். படத்தொகுப்பு – ராஜ் கீர்த்தி, சண்டைப் பயிற்சி – மாஸ்மனோ, நடனம் – ஜாய் மதி.

திருக்குறள் பொருட்பாலில் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறளையும் உள்ளடக்கிய கதை இது.

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர்

என்ற குறளின் அர்த்தமான, “மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்..” என்ற கருத்தை மையப்படுத்தியே இந்தப் படத்தின் ஒட்டு மொத்த திரைக்கதையும் பின்னப்பட்டுள்ளது.

குடிப் பழக்கம் இல்லாத நபரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் பெண்ணிற்கும், குடிப் பழக்கத்தை தவிர வேறு எந்த பழக்கமும் இல்லாத ஆணிற்கும் திருமணம் நடந்தால் குடும்பம் என்ன ஆகும் என்பதே கதை.

இது பழைய கதை அல்ல. திரைக்கதை புதிதாக அமைக்கப்பட்ட பழைய கதைக் களனில் கூடுதலாக நகைச்சுவை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி சின்னசேலம், ராயப்பனூர், நமச்சிவாயபுரம், தென்செட்டியந்தல், பைத்தந்துறை, எலியத்தூர், கல்வராயன் மலை ஆகிய ஊர்களில் 45 நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இயக்குநர் R.பாண்டியராஜனிடம் ‘டபுள்ஸ்’ மற்றும் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கோ.செந்தில்ராஜா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தத் திரைப்படத்தில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் எப்படி மதுவிற்கு அடிமையாகிறார்கள் என்பது தெளிவாக விளக்கப்பட்டு இருக்கிறது. 12 வகையான குடிகாரர்களை வகைப்படுத்தி அவர்கள் திருந்துவதற்கான வழிமுறைகளும் இதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டபோது, ஒரு நகைச்சுவை பட்டிமன்றம் போல் நடந்ததாம். மிக விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Our Score